பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

237


கீழ்க்கண்டவை புகழூர் பிராமி எழுத்துக் கல்வெட்டுகளில் சரித்திர ஆராய்ச்சிக்கு மிக முக்கியமானவை. 1927-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இவை, எபிகிராபி இலாகாவின் 1927-28-ஆம் ஆண்டு அறிக்கையில் கூறப்படுகிறது.[1] ஒரே கருத்துள்ள இந்தச் சாசனம் இரண்டு இடங்களில் எழுதப்பட்டிருக்கிறது. இரண்டு சாசனங்களாகக் கருதப் பட்டாலும் உண்மையில் இவை இரண்டும் ஒன்றே. இரண்டின் வாசகமும் ஒன்றே. இரண்டாவது சாசனத்தில் சில எழுத்துகள் மறைந்து விட்டன. ஆனால் இரண்டு சாசன எழுத்துகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, விடுபட்டுள்ள எழுத்து களைச் சேர்த்துப் படித்துப் பொருள் தெரிந்து கொள்ளக்கூடிய தாக இருக்கிறது. இந்தச் சாசன எழுத்துகள் இவை:


இவற்றின் வாசகம் இது.

தி அமண்ணன் யாற்றூர்
செங்காயான் உறைய
கோ ஆதன் சேல்லிரும் பொறை மகன்
பெருங் கடுங்கோன் மகனிளங்
கடுங்கோ ளங்கோ ஆக அறுத்த கல்


  1. *Annual Report S. I. Epigraphy 1977-1978. Pt. II para 1.