பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

பிட்டனுடைய இறைவனும் கோதை எனப்படுகிறான். (கோதை என்பது தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறையின் சிறப்புப் பெயர் என்று தோன்றுகிறது) உறையூர் மருத்துவன் தாமோதரனாரும் (புறம் 170: 6. 8) இவனைப் பாடியுள்ளனர்.

குதிரைமலை நாட்டை ஆண்ட எழினி என்பவன் ஒருவன் கூறப்படுகிறான். இவன் பிட்டங் கொற்றனுக்குப் பிறகு இருந்தவன் எனத் தோன்றுகிறான். (இந்த எழினி தகடுரை 'யாண்ட அதிகமான் குலத்தில் இருந்த எழினியல்லன்.) குதிரைமலை எழினி வள்ளலாகவும் இருந்தான். “ஊராதேந்திய குதிரைக் கூர்வேல், கூவிளங்கண்ணிக் கொடும்பூண் எழினி” என்று (புறம் 158: 8.9) இவன் கூறப்படுகிறான்.

எழினிக்குப் பிறகு முதிரத்தையும் குதிரை மலையையும் அரசாண்டவன் குமணன் என்பவன். இவன் வள்ளல்களில் ஒருவன்.[1] குமணனைப் புகழ்ந்து பெருஞ்சித்திரனார் பாடிய செய்யுட்கள் புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ளன. (புறம் 160, 161, 162, 163)

குமணனுக்குத் தம்பி யொருவன் இருந்தான். அவனுக்கு இளக்குமணன் என்று பெயர். இளங்குமணன், தமயனான குமணனைக் காட்டுக்கு ஓட்டிவிட்டு நாட்டைக் கைப்பற்றி யர சாண்டான், குமணன் காட்டிலே இருந்தான். புலவர் பெருந்தலைச் சாத்தனார் குமணனைக் காட்டிலே கண்டு ஒரு செய்யுளைப் பாடினார். அதில் அவர் தம்முடைய வறுமைத் துன்பத்தைக் கூறினார். (புறம் 164, குமணன் செய்யுளைக் கேட்டு மனம் உருகித் தன்னிடம் அப்போது பொருள் இல்லையே என்று கலங்கித் தன்னுடைய போர் வாளைப்


    • ‘அதிராயாணர் முதிரத்துக் கிழவன், இவன் விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமணன்’ (புறம் 158: 25, 26) “அரிதுபெறு பொலங்கலம் எளிதினில் வீசி, நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன், மட்டார் மறுகின் முதிரத்தோனே” (புறம். 60-11-18)