பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவாக்கிய சிறப்பையும் பெற்றிருக்கிறார். இவரது “குன்றுடையான்” என்ற நாடகம் 1968 ஆம் ஆண்டு தமிழ் நாட்டுச் சங்கீத நாடக சங்கத்தின் பரிசற்குரியதாய்த் தேர்ந்தெடுக்கப் பெற்று அன்றைய மேதகு ஆளுநர் அவர்கள் கலைமாமணி என்ற விருதனை தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்தின சார்பாக வழங்கினார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு நாடகம் வரையத் தொடங்கிய இவர் அறிஞர் அண்ணா அவர்களின் கருத்துக் கலைப் பரம்பரையில் ஒருவன் என்பதிலே பெருமையடைபவர். இவரது “ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி” போஜன் ஆதித்தன் கனவு" "பொன்முடி” “பாசவலை போன்ற திரைப்படங்கள் வலுவான கதைக்கும், வளமான உரைநடைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குபவை. இவரின் நாடக இலக்கியத் தொண்டினைப் பாராட்டும் வகையில் இன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் தலைமையில் புரட்சி நடிகர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் 10.8.1963 ல் திருச்சிராப்பள்ளியில் பொன்னாடை போர்த்தினார்கள். எவரும் எதிர்பாராத நேரத்தில் 21.4.1971 ம் தேதி திடிரென மாரடைப்பால் இயற்கை எய்தினார். இவர் மறைந்த செய்தியைக் கேட்டவுடன் அன்றைய தமிழக முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் தன் அனுதாபச் செய்தியை அனுப்பினார். மாண்புமிகு அமைச்சர். க. இராசராம் அவர்கள் தமிழக அரசின் சார்பில் நேரில் வந்து இறுதி மாரியாதை செய்து பெருமைப்படுத்தினார். சலகை கண்ணனார் அவர்களின் எழுத்துக்களில் அடக்கமும், ஆழமும், நிறைவும் அமைந்திருக்கும். இவரது ஐம்பத்தெட்டு ஆண்டு வாழ்க்கையில் மிக சிறந்த பல நாடகங்களை அளித்திருப்பதுடன் தமிழ் மரபு குன்றாத பைந்தமிழ்ப் பாடல்களையும் இயற்றி தமிழுக்கு தொண்டாற்றியுள்ளார்.