பக்கம்:கொடி முல்லை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிதாசன்

7



நடக்க அவன் கால்மறுக்கும்; இதற்குள் ளாக
நானுாறு முறைதிரும்பிப் பார்த்தான்; கட்டுக்
கடங்காத உள்ளத்தை அவள்பால் விட்டுக்
கள்ளுண்டான் போல் நடந்து சென்றிட்டானே!

அழைக்கின்ற குரல்கேட்டான்; நின்றான்; அல்லி
தலைதெறிக்க அங்கோடி வந்தாள்; காய்ந்த
தழையின்மேல் அவன் வீசி மறந்து வந்த
கைவாளைத் தந்திட்டாள். அழகன் 'மின்னும்
குழையாளே! உன் தலைவி ஊரைப் பேரைக்
கூறாயோ?' எனக்கேட்டான், உயிர் போனாலும்
பிழையாத மாமல்ல அரசன் நோற்றுப்
பெற்றமகள் கொடிமுல்லை' என்றாள்; போனாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/13&oldid=1252853" இலிருந்து மீள்விக்கப்பட்டது