பக்கம்:கொடி முல்லை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் 8

கலம்பாடியிடம் அழகனைப் பற்றித்
தச்சர்கள் முறையிட்டார்கள்.

சிலநாளாய் அழகனிங்கு வருவ தில்லை;
செய்தொழிலைக் கண்ணெடுத்தும் பார்ப்ப தில்லை;
'கலைக்கோயில்' என்றவுடன் 'சீச்சி! பாகற்
கா’யென்று சொல்கின்றான்; அந்தோ! அந்த
மலைப்பக்கம் போகின்றான்; படுத்து றங்கி
வருகின்றான் அந்தியிலே; கடலை மூக்குக்
கலகலப்பும் அவன் சொல்லில் இல்லை! இல்லை!
காவலனோ இதையறிந்தால் துன்ப மாமே!

'நெடுநாளாய் உம்மிடத்தில் சொல்ல நாங்கள்
நினைத்திருந்தோம்; உயிர்த்தோழர் நீரா யிற்றே'
முடிமன்னன் மாமல்லன் குறித்த நாளில்
கலைக்கோயில் முடிவடைய வில்லை என்றால்,
இடிவீழ அருகிருந்த தென்னை ஆவோம்!
இதற்கேற்ற வழி செய்வீர்; 'உங்கள் சொல்லின்
படிநடப்பான் எந்தலைவன் அழக'னென்று
பலர் சொல்ல நாங்களிங்குக் கேட்டி ருந்தோம்!

என்றுரைத்தார். அழகன்கீழ் இருந்து வேலை
இயற்றுகின்ற கற்றச்சர். தலையைத் தாழ்த்திச்
சென்றிட்டான் நலம்பாடி அவர்கள் காட்டும்
திசைநோக்கி மலையோரம்; அழகன் அந்தக்
குன்றின்மேல் புலப்படவே இல்லை; சற்றுக்
குளிர் நீழல் அமர்ந்திட்டான், உளியின் ஒசை
குன்றிடுக்கில் அருகிவரக் கேட்டான்; பார்த்தான்;
குகையுள்ளே அழகன்கல் செதுக்கக் கண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/24&oldid=1252904" இலிருந்து மீள்விக்கப்பட்டது