பக்கம்:கொடி முல்லை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிதாசன்

19

'கத்திக்கும் தானினிமேல் அஞ்சேன்; வேந்தன்
காவலுக்கும் நானஞ்சேன்: தமிழைப் போலத்
தித்திக்கும் கொடிமுல்லை யாளே! உன்னைச்
சேரவழி அழகனுக்குக் காட்டா யோ?சொல்!
செத்தொழிவேன் நீஇன்றேல்' என்ற பேச்சைச்
செவிமடுத்தான் நலம்பாடி; உளியால் நன்கு
சித்திரத்தில் அன்றிரவு தீட்டி வைத்த
கொடி முல்லை உருவத்தைச் செதுக்கக் கண்டான்.

கொடிவழியாய் நலம்பாடி இல்லம் சேர்ந்தான்;
குகையுள்ளே கண்டதெல்லாம் எண்ணிச் சோர்ந்தான்;
'இடுக்கணிலே உதவுவதே இனியர் செய்கை'
என்றதவன் நல்லுள்ளம்! 'நச்சுப் பாம்பின்
கடிபட்டார் பிழைத்திடுவார்; தோள ணைப்பே
'காதலுக்கு மாற்' றென்றான்: தீட்டி வைத்த
படமெடுத்தான்; கீழ்வைத்தான்; நீண்ட நேரம்
பார்த்திருந்தான்; தலையசைத்தான்; வெளியிற் போனான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/25&oldid=1252909" இலிருந்து மீள்விக்கப்பட்டது