பக்கம்:கொடி முல்லை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

கொடிமுல்லை


அன்றந்தச் சோலையிலே நடந்த யாவும்
அழகுபெற வரைந்திருக்கக் கண்டாள்; கீழே
என்றும்நான் உன் நினைவால் வாடுகின்றேன்;
வழிசெய்வாய்' என்றெழுதி இருக்கக் கண்டாள்.

அன்போடு கொடிமுல்லை ஒவி யத்தை
மார்பணைத்துக் கொண்டிருந்தாள்; அவனைச் சேர
என்செய்வேன்? யார்துணையைப் பெறுவேன்; காவல்
இருப்பவரை ஏமாற்றப் போமோ?’ என்றாள்.
பொன்பெற்றுத் துய்க்கவழி அறியா ஏழை!
அறைபுகுந்தான் புறாத்தேடச் சென்ற அல்லி!
‘என்னுயிரை மீட்பாயோ?' என்றாள் முல்லை.
'இப்பொழுதே உயிர்கொடுப்பேன்' என்றாள் அல்லி.

உள்ளத்தைக் கொடிமுல்லை திறந்துவிட்டாள்!
'ஊம்' கொட்டிக் கேட்டிருந்தாள் அல்லி; 'அம்மா!
கள்ளவழி நானறிவேன்; அஞ்சேல்; யாரும்
காணாமல் இன்றிரவே அவரை இங்குத்
தள்ளிவந்து சேர்க்கின்றேன்; கலங்கேல்' என்றாள்.
கொடி முல்லை அவளுடைலைத் தழுவிச் சொல்வாள்:
'வெள்ளத்தில் நீ என்னைக் கரையில் சேர்த்தாய்;
விளக்கொளியே! உனையென்றும் மறவேன்' என்றாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/28&oldid=1252964" இலிருந்து மீள்விக்கப்பட்டது