பக்கம்:கொடி முல்லை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

கொடிமுல்லை


'மங்காத என்கலையின் சுடரே! என்னை
வாழ்வித்தால்! நீவாழி!' என்றான்; மற்றும்
'திங்களென்று சொல்லிடுவார் உன்மு கத்தை;
உவமையினைத் தேடாத குறைதான்’ என்பேன்;
'திங்களுக்குக் கறையுண்டு; வளர்ச்சி யுண்டு,
தேய்தலுண்டு; போத்தரையன் மகளே! உன்னை
எங்களரும் தூய தமிழ்' என்பேன்; 'என்னை
எதிர்த்தாலும் எதிர்க்கட்டும்; அஞ்சேன்' என்றான்

கட்புலனால் கொடிமுல்லை அழகன் தோளைக்
கற்கண்டாய் உண்டிருந்தாள்; கிளையின் உச்சி
சொட்டுகின்ற தேனொத்த அவன் வாய்ச் சொல்லைக்
காதிரண்டால் சுவைத்திருந்தாள்; அவனை வாரிப்
பட்டுமெத்தை அவள் தொடைமேல் கிடத்தி வைத்துப்
பரிவோடு கன்னத்தைத் தடவி விட்டாள்;
'கட்டுக்கும் முட்டுக்கும் அஞ்சிவாழ்ந்தால்
காதலெங்குத் தழைத்திருக்கும்? சொல்வீர்!’ என்றாள்.

'பெண் இனங்கள் காதலுக்காய்ச் சுற்றம் நட்புப்
பெற்றோர்சொல் மறுத்தெதிர்க்க வேண்டும்; காதல்
கண்ணாகும் நம்நாட்டிற் கென்று தேறி
இடிவிழினும் அஞ்சாது காத்தல் வேண்டும்;
பெண்ணுரிமை யற்றதனால், அந்தோ! நாடு
பீடிழந்த தென்றுணர வேண்டும்; நீயோ
மண்ணரசி! நான்கல்லைச் செதுக்கும் தச்சன்!
வாக்களிப்பாய்; எதிர்த்துலகை மிதிப்போம்!' என்றான்.

'வானின்றி வாழ்கின்ற பச்சை யுண்டோ?
மடங்குதிரை நீர்நிலைகள் இன்றேல் இங்கு
மீனுண்டோ? மண்ணுலகில் இன்று வாழும்
மிகச்சிறிய உயிர்உண்டோ வெய்யோன் இன்றேல்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/32&oldid=1253067" இலிருந்து மீள்விக்கப்பட்டது