பக்கம்:கொடி முல்லை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் 16


அழகன் உலகை வெறுத்தான்: உணர்ச்சியால்
வசை மொழிந்தான்; கடலுள் வீழ்ந்து தன்னுயிரைப்
போக்கிக் கொண்டான்.

ற்றச்சன் அவளுடல்மேல் வீழ்ந்து வீழ்ந்து
சிறுபிள்ளை போற்கதறி அழுதான்; 'கண்ணே!
உற்றாரும் உறவும் நீ என்றே இந்நாள்
உயிர் வாழ்ந்தேன்; எனைவிட்டுப் பிரிந்தாய்; கண்கள்
பெற்றிழந்த குருடன்நான்; அந்தோ! உன்னைப்
பிரிந்திங்கே உயிர் வாழ என்னால் ஆமோ?
பொற்கொடியே! என்உயிரே! உனைத்தொ டர்ந்து
புறப்பட்டேன்? என்றவளை வாரிக் கொண்டான்.

'சிறைமீட்டான் உயிர்கொடுத்து நீயும் நானும்
சேர்ந்துலகில் வாழ்ந்திருக்கப் புலவன்; அந்தோ!
மறைந்ததடி உன் உயிர்தான்! இனிமேல் இந்த
மண்ணுலகும் விண்ணுலகும் குப்பைக் கூளம்!
கறையில்லா முழுமதியே! மணியே! உன்னைக்
கைநழுவ விட்டுப்பின் வாழ்தல் உண்டோ?
அரைநொடியும் உனைப்பிரிய மனமில் லாத
அழகனிதோ புறப்பட்டேன்; இங்கென் வேலை?

'எனக்காகத் தூதுவிட்டாய்; மான வன்மன்
உயிர் உண்ண எத்தனிக்கும் வேளை காத்தாய்;
எனக்காக அவைஎதிர்த்தாய்; நான்கா ணாத
எவனோபோல் உயிர்கொடுத்துச் சிறையை மீட்டாய்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/49&oldid=1253104" இலிருந்து மீள்விக்கப்பட்டது