பக்கம்:கொடி முல்லை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டாம் பதிப்புக்கு
கவிஞரின் முன்னுரை

நானும், என் நண்பர் சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் திருமலை செங்கல்வராயன் அவர்களும் மாமல்லபுரம் சென்றிருந்தோம்.

கலையும், மலையும், கத்துகடலும் என் கருத்தைக் கவர்ந்தன; கற்பனையைத் துண்டின. அதன் விளைவே இச்சிறு நூல்.

மக்கள் மன்றத்தில் இதை வைக்கிறேன். மதிப்பிட வேண்டியது அவர்கள் பொறுப்பு.

முதற் பதிப்பைப் புதுக்கோட்டைச் செந்தமிழ் நிலையத்தார் வெளியிட்டனர். இப்பதிப்பைச் சென்னை மலர் நிலையத்தார் வெளியிட்டுள்ளனர். இருவர்க்கும் என் நன்றி! வாணிதாசன்


மூன்று நான்கு, ஐந்து ஆகிய பதிப்புகள் பாரி நிலைய வெளியீடாக வந்துள்ளன. வளமார் தமிழே வாயுரைக்கும் சொல்லெல்லாமாகத் திகழ்ந்தவர் வாணி. அவர் 'கொடி முல்லை' தமிழ் நெஞ்சங்களிலே பற்றிப் படர்ந்து மணம் பரப்பும் என்பதில் ஐயமில்லை. பாரி நிலையத்தார்


ஆறாம் பதிப்பு வாணிதாசன் பதிப்பக வெளியீடாக வருகின்றது. கொடிமுல்லை க(வி)தை பிறந்தமைக்கான காரணத்தை வாணிதான் கூறியுள்ளவாறே மேலே அச்சிட்டுள்ளோம். இது படைப்பைப் பற்றிய படைப்பாளரின் வாக்குமூலம். இவ்வாக்கு மூலம் கொடிமுல்லை ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவும். வாணிதாசன் பதிப்பகத்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/5&oldid=1315878" இலிருந்து மீள்விக்கப்பட்டது