பக்கம்:கொடு கல்தா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– இதற்குள் அடுத்த யுத்தம் வந்துவிடுமோ என்ற அச் சமும் உலக வானிலே கார்மேகமாய் கவிந்து தொங்கு கிறது. உலகப் பரப்பை நாசமாக்கும் மகாயுத்தங்கள் போக, சதா அங்கு மிங்கும் யுத்தங்கள், கலகங்கள், குழப்பங்கள் நிகழ்ந்து கொண்டேயிருப்பது பத்திரிகைகள் காட்டி வரும் அரசியலின் பெயரால், மதத்தின் பெயரால், சமுதாய அமைப்பு முறைகள், கட்டுப்பாடுகள், பண்டையக் கலாசாரங்கள் இன்னோரன்ன எண்ணற்ற பண்புகளின் பெயரால் மனிதரை மனிதர் வாட்டும் வழக்கம் வளர்ந்தே வரு கிறது. - மனிதன் மனிதனாக வாழவில்லை. பல விஷயங்களைக் காணும்போது, மனிதனுக்கு மனிதனாக வாழவே தெரிய வில்லை என்பது தெளிவாகிறது. மனிதன் நாசப்பாதை யிலே புரளுகிறான் என்பது தெரிகிறது. இதனால், மனிதன் உருப்படுவானா? உயிர்க்குலம் உருப்படுமா? ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கைத் தேவை களைப் பெற்று அமைதியும் அன்பும் ஆனந்தமும் நிறைந்த வாழ்க்கை வாழ முடியுமா, முடியாதா என்பன போன்ற பிரச்னைகள் சிந்தனையில் உறுத்துகின்றன. உலகச் சிந்தனையாளர்கள் அவரவர் மனப்பண்புக்குத் தக்கபடி விடை என்று எதையாவது சொல்லிவிடுகிறார்கள். அறிஞர் எச். ஜி. வெல்ஸ் மரணமடைவதற்கு முன்பு மனிதவர்க்கத்தின் பின்னோட்டம் பற்றிப் புலம்பி, மனித

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/7&oldid=1395293" இலிருந்து மீள்விக்கப்பட்டது