பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒரு சொல் கேளீர் 103 குறள் வாழும் நாட்டில்-சங்கப் புலவர் அறமுணர்த்திய காட்டில் - மூவேந்தர் முறை திறம்பாது ஆண்ட நாட்டில், இன்றும் வாழும் பிணக்குகளுக்கு இடம் உண்டோ ? இல்லை யே! இதை எண்ணிய பாரதி, 'பல சொல்விப் பயனில்லை. ஒரு சொல் கேளீர்' எனச் சுருக்கமாகத் தமிழ் மக்களுக்குச் சேதி சொல்லுகிறான். அதுதான், சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! என்பது. ஆம்! தமிழ்ச் சமுதாயம் தழைக்க வேண்டு மானால், தலை நிமிர்ந்து வாழவேண்டுமானால், தமிழ்மொழி தரணியில் உள்ள ஊர்தோறும்-- தெருவெல்லாம் செழிக்கத் தான் வேண்டும். தமிழ் செழிக்கிறது. உலக அரங்கில் தமிழுக்கு இட முண்டு. வள்ளுவர் குறளும், கம்பன் மொழியும் பல மொழிகளில் பெயர்க்கப் பெறுகின்றன. எனினும் இன்னும் உலக மக்கள் தமிழின் இனிமையையும் தொன்மையையும் நன்கு உணரவில்லை என்பதை உலக நிகழ்ச்சிகள் காட்டு சொல்லைக் கேட்கத்தான் வேண்டும். இன்று கேளாது வாளா யிருப்போமானால், பின் என்றும் தமிழ்ச் சமுதாயம் தலைதூக்க வழியில்லை: பிறநாட்டாரெல்லாம் தமிழின் தொன்மையையும், அதிலுள்ள நிலைமையையும் காண அவாவுகின் றனர். தமிழர் அவற்றையெல்லாம் பிற மொழி களில் விளக்கி எழுதி, உலகுக்கு அன்னை தமிழை அறிமுகப் படுத்த வேண்டும். பாரதி காட்டிய பல உண்மைகனை உலகுக்கு உணர்த்த வேண்டும். வெளி நாட்டோர் வணக்கம் செய்யத்தக்க நல்ல கலைப்பெட்டகங்கள் தமிழில் உள்ளன. தமிழர் அவன் ஒரு சொல்வழிதாம் சேம முற - தம் நாடும் மொழியும் சேம முற, தமிழை உலகமெலகம் பரவும் வகை செய்தல் வேண்டும்.