பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

110) கொய்த மலர்கள் சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர் காண்-அவர் சொல்லில் பழுத்திருக்கக் காரணம் இல்லை இன்னம் கடைசிவரை ஒட்டிருக்குமாம் - இதற்கு எண்ணப்படுவதில்லை ஏடி கண்ணம்மா, என்று கணவன் மனைவியர் காதல் வாழ்வு ஏதோ ஒரு. பிறவியில் வந்து கனவாகக் கழியும் ஒன்று அன்று என்பதையும், அது முன்னர் உண்டான பல பிறவிகளிலும் பின் வரப்போகும் எல்லாப் பிறவிகளிலும் பின்னிப்பிணைந்து நிற்கும் ஒப்பற்ற தெய்வ நலம் சான்றதென்றும் விளக்கு கின்றார் பாரதியார். இந்த வள்ளுவர் கருத்தை, அவர் காலத்தை அடுத்து வாழ்ந்தவரும், வள்ளுவரைப் 'பொய்யில் புலவன்' எனப் போற்றியவருமாகிய சாத்தனார் தம் மணிமேகலையில் நன்கு, விளக்குகிறார். கலங்காத உள்ளமுடைய மணிமேகலை, உதயகுமரன் வாளால் வெட்டுண்டு வீழ்ந்த காலத்தில் கலங்கியபோது, கந்திற்பாவை கூறியதாகக் காட்டும் சொற்கள் இவ்வுண்மையை விளக்குவனவாகும். ' நினக்கு இவன் மகளுத் தோன்றியதூஉம் மனக்கினி யாற்கு நீ மகள் ஆயதூஉம் பண்டும் பண்டும் பலபிறப்பு உளவால் கண்ட பிறவியே அல்ல காரிகை' (21, 29-32) என்று சாத்தனார் காட்டுகின்றார் என்றால், தமிழர், காதல் நலம் ஒரு பிறவிபால் முளைத்துக் கருகுவது அன்று என்றும். அது வழிவழிப் பிறவிகள் தோறும் பற்றும் என்றும் நன்கு உணர்ந்திருந்தார்கள் என்பது வெளிப் படை. இத்தகைய இனிய காமத்தைச் சிலர் இன்று கள்ளொடு தொடர்பு படுத்திக் காட்டுகின்றனர். வள்ளுவரும் அன்று கள்ளையும் காமத்தையும் இணைத்துப் பார்க் கின்றார். தன்னை மறக்க வைத்தலில் இரண்டும் ஒன்றாகத் தோன்றினும், பலவற்றுள் காமம் மேம்பட்டது என்பது