பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வள்ளுவர் காட்டிய காதல் நெறி 111 அவர் கருத்து. கள் தன்னைக் குடித்தால் தான் மகிழச் செய்து மறக்க வைக்கும். ஆனால் காமமோ அவ்வாறன்று; கண்டாலே மகிழச் செய்து தம்மை மறக்க வைப்பது. மற்றும் முன்னைய காதல் நிகழ்ச்சிகளை எண்ணி எண்ணி மகிழ்தலும், உற்ற கா தலரைக் கண்டு மகிழ்தலும், காமத் துக்கு உண்டு எனவும், அச்செயல்கள் கள்ளுக்குக் கிடையாதெனவும் வள்ளுவர். விளக்குவது எண்ணி எண்ணி மகிழத்தக்கதன்றோ! 'உண்ணற்க கள்ளை 'யென வெறுத்து ஒதுக்கிய வள்ளுவனார், அக் கள்ளொடு தொடர்பு படுத்திக் காமத்தை அதனிலும் மேலான தாகக் காட்டி, அதன் வழி மக்களை வாழச் செய்கிறார் என்றால், காமத்தோடுகள் தொடர்புபடுத்திக் காட்டப் பட்டாலும், காமம் வெறுக்கப்படாது வேண்டப்படுவது என்பதை அறிய மகிழவேண்டியுள்ளது. மயக்கும் தொழிலுக்குக் கள் உவமையாக்கப்படினும். அதிலும் காதலே வெற்றி பெறுகின்றது என அவர் காட்டத் தவறவில்லை. அவர் பாடல்கள் இவை: • உண்டார்கண் அல்லது அடுகறாக் காமம் போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று ' (1090) ' உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்துக் குண்டு ' (1281) இக் காதல், உள்ளத்து அரும்பி மெள்ள மெள்ள மலருவதாகும். முதலில் காணும் தலைவனும் தலைவியும் தத்தம் உள்ளக் கருத்தை எப்படி ஒருவருக்கொருவர் உணர்த்துவார்கள்? பலரிடையில் பேசமுடியுமா? முடி யாது. பலரிடையில் இக்காதலர் முன்பின் அறியா தவர் போலவே நடிப்பார்கள் என்கிறார் வள்ளுவர். * ஏதிலார் போலப் பொதுநோக்கு கோக்குதல் காதலார் கண்ணே உள' (1099) என்பது குறள்.