பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வள்ளுவர் காட்டிய காதல் நெறி 113 அறிவின் திறம் வியக்கற்பால தன்றோ பல உவமைகள் வாயிலாகவும், உற்ற அனுபவ வாயிலாகவும் தலைலன் தலைவியர் வாக்கில் அந்தக் கூட ல் இன்பததையும், ஊடல் வழி உற்றுப் பிறக்கும் உள்ள நெகிழ்ச்சியையும் பிரிதலாற்ற உள்ள நிலையையும். அவர் எண்ணி உணர்த்தும் போது நாம் நம்மை மறக்கத்தான் வேண்டும் ஆம்! இந்தக் காமத்துப்பாலைப் பயிலும் போது நாமே அக் காதலராகிவிடுகின்றோம். மகிழ்ச்சியில் மகிழ்கின்றோம். புலத்தலில் புலக்கிறோம். ஊடலில் ஊடுகிறோம்-இரங்கலில் இரங்குகிறோம். ஆம், வள்ளுவர் நம்மை அவராக்கிப் பின் அந்தக் காதல் பாத்திரங்களாகவே ஆக்கிவிடுகிறார். அவர் வாய்மொழி வழியே இந்த உண்மையைக் கண்டு அமைவோம். தலைவியொடு கூடி மகிழும் இன்பத்தை எண்ணி எண்ணிப் பார்க்கிறான் தலைவன். அவளைச் சேர்ந்திருக்குங் கால் பெறும் இன்பமும் பிரியுங்கால் பெறுத் துன்பமும் அவனைப் பேசவைக்கின்றன. தன் மனைவியொடு கூடிப் பெறும் இன்பத்துக்குப் பேரின்ப மோட்ச வீடும் சமமா காது என்கின்றான் அவன். தலைவியைக் கூடக் கூடக் காணும் புதுப்புது இன்பநிலை அறிய அறிய அறியா மையே விரியும் உலக அறிவியலைப் போன்று பெருகிக் கொண்டே போகின்றது என்கின்றான். நெருப்பு நெருங் கினால் சுடும். விலகினால் தண்ணென்றிருக்கும்; ஆனால், அவளிடம் உள்ள காமத் தீ அருகில் தண்ணென்றும் விலகினால் சுட்டும் நிற்கிறது எனப் பாராட்டுகின்றான். இப்படி இவனுடைய பாராட்டு விரிந்து கொண்டே செல் கிறது. வள்ளுவர் வாய்மொழியைத் தருகின்றேன். ' தாம்வீழ்வார் மென்தோன் துயிலின் இனிதுகொல் தாலரைக் கண்ணான் உலகு' (1103) என்றும், • அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு ' (1110) என்றும்,