பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

114 கொய்த மலர்கள் • நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்என்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள் ' (1104) என்றும். நன்கு தலைவியால் பெறும் இன்பத்தையும். பிரிந்தால் உறும் துன்பத்தையும் உவமைகள் வாயிலாக விளக்கு கின்றார். இவை போன்றே தலைவன் அருமையைத் தலைவி பாராட்டுவதும் அறிந்து இன்புறத்தக்கது. ஒருவரை ஒருவர் கண்ட பிறகு இருவரும் மாறி மாறி ஒவ்வொருவர் உள் ளத்தும் இடம்பெற்று விட்டனர். எனவே அவர்கள் உள் ளம் காதலர் வாழும் உள்ளமாகி விட்டது. இந்த உள்ளத் தில் வெம்மை படலாமா? வெப்பம் காதலருக்குத் துன்பம் உண்டாக்கு மல்லவா ! எனவே காதலி தான் வெம்மையான பொருள்களை உண்ண மாட்டாமையைக் குறித்து விளக்குகிறாள். தான் வெம்மையான பொருளை உண்டால், அதனால் உள்ளத்து நிலைத்து வாழும் காத லருக்கு ஏதம் வரும் என அஞ்சும் நிலை காதலியின் உயரிய பண்பாட்டை எண்ணத் தூண்டுகிற தன்றோ! நெஞ்சத்தார் காத வைராக வெய்துண்டல் அஞசுதும் வேபாக்(கு) அறிந்து (1128) என்று வள்ளுவர் அத்தலைவியின் கருத்தை அழகுபட எடுத்துக் காட்டுகின்றார். இதே நிலையில் தம் கணவரைப் பிரிந்த தலைவியர் நிலையை வள்ளுவர் நன்கு விளக்கி, அவர்கள் எங்கே பிரிந்திருந்தாலும் இடையறாது நினைக்கின்ற நிலையிலே வாழ்கின்றவர் என்பதையும் காட்டுகின்றார். இரவுப் பொழுதில் கணவனை எண்ணி எண்ணி ஏங்கும் பெண்கள் தாம் உறங்காது வாடும் நிலையையும், உலகெலாம் உறங்கும் நிலையையும், அதுகாலை இரவே தமக்குத் துணை (யாகும் பான்மையையும்,