பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

116 கொய்த மலர்கள் இவ்வாறு இரவில் ஆட்சிபுரியும் காமகோய் கூடி இருக்கும் தலைவரை ஒன்றும் செய்யாது. அவர்தம் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லையே! என்றாலும் பிரிந்து நிறம் வரைப் பல வழிகளில் இரவு அல்லல் படுத்தும். பாத தலைவரை எண்ணி எண்ணி வாடும் மங்கையர் உறங்க மாட்டார்கள் எனக் கண்டோமல்லவா! ஒரு வேள் உறக்கம் வருமானால், அதிலும் தம் காதல்நோய் பற்றியே கனவு காண்பார்கள். விழித்தால் அக்கனவு நீங்கிவிடு மல்லவா! எனவே தலைவனைக் காணாது நனவில் கவலு வார்கள். ஆகவே சில பெண்கள் கனவையே விரும்பு வதும் உண்டு. கனவிலே தம் தோள் மேல் துஞ்சம் காதலர் நனவில் நெஞ்சத்தே ஆட்சி புரிவாரல்லவா இதையும் எண்ணிப் பார்க்கிறாள் ஒரு பெண். இங்கேகாணும் இரு குறள் களும் கனவின் சிறப்பையும் அதன் ஏற்றத்தையும் காட்டுகின்றன. * நனவுஎன ஒன்று இல்லை யாயின் கன்னவினான் காதலர் நீங்கலர் மன்' (1216) துஞ்சுங்கால் தோள் மேலராகி விழிக்குங்கால் நெஞ்சத்த ராவர் விரைந்து' (1216) இக் குறள் பாக்களினாலெல்லாம் அறிவன யாவை? காதல் அல்லது காமத்தால் பின்னப்பட்டார் இருவர் எக் காரணத்தாலும் எக்காலத்திலும் எத்தனை பிறவி எடுத் தாலும் பிரியாது. உள்ளத்தால் உடன் உறைந்து மற வாது வாழ்க்கை நடத்தும் மண்பினர் என்பதும், அவர் வழியே கற்பு நலம் நாட்டில் சிறந்து நிற்கின்றது என்பதும் தேற்ற மன்றோ! இனி. இவ்வாறு உள்ளத்தால் ஒன்றிய காதலர் தம் மன் சிறு சிறு வேறுபாடுகள் காரணமாக மாறுபாடு கொண்டுப் பிணங்கி ஊடுவது உண்டு என்பதும். அவ் வூடலே பின் அவர் தம் கூட லுக்குக் காரணமாக நின்றும்