பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வள்ளுவர் காட்டிய காதல் நெறி 117 அவருக்கு நிலைத்த இன்பத்தைத் தருவது என்பதும் வள்ளுவர் காட்டும் இன்பப் பகுதியின் நுணுக்கங் களாகும். பிரியக் கூடாத தலைவியைப் பல காரணங்களால் தலைவன் பிரிந்து விடுகின்றான். 'பிரிய மாட்டேன்' என்று சத்தியம் செய்து கொடுத்த தலைவனின் பிரிவு தலைவியை வாட்டுகின்றது. அவன் கொடுமையை எண்ணி நைகிறாள் அவள். எனினும் அவள் நெஞ்சம் தலைவன்பால் செல்லு கிறது. ஆனால் பேதைப் பெண், வேறு வழியாக நினைக் கிறாள். தன்னை விட்டுப் பிரிந்த தலைவன் தன்னை அடி யோடு மறந்து விட்டதாகக் கருதுகிறாள்; அவன் நெஞ்சமும் மறந்திருக்குமென நினைக்கிறாள். ஆகவே அவள் தன் நெஞ்சைப் பார்த்து, ' அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் என்நெஞ்சே நீ எமக்கு ஆகாதது?' (1291) எனக் கேட்கின்றாள். மற்றும் அவள் நெஞ்சு அவன் பின்னால் செல்வதற்கு இரங்குகிறாள். அதைப் பேதை என்றும் பழிக்கிறாள். * பரிந்தவர் நல்கார் என் றேங்கிப் பிரிந்தவர் பின் செல்வாய், பேதை என் நெஞ்சு (1248) என்பது குறள். பின் அவள் உள்ளம் திரும்புகிறது. எண்ணம் சிறக் கிறது. பிரிந்த காதலர் திரும்புவார் என்ற உணர்வு உண் டாகிறது. ஏன்? அவர். தன் உள்ளத்திலேயே குடி கொண்டவர் என்ற உணர்வும் பிறக்கிறது. அதனால் அன்றே அவள் வெம்பையை உண்ணவும் அஞ்சினாள், எனவே உள்ளத்திலிருப்பவரை விட்டு ஓடும் நெஞ்சை அழைத்து அவள் கூறும் உரை சிறந்தது. ' உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ யார் உழை சேறி என் கெஞ்சு' (1249) கொ . ம. 8