பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

118 கொய்த மலர்கள் எனப் பிரிந்த கணவரைப் பரிந்து ஏற்கும் உள்ளத்தை அவள் காட்டி, உள்ளம் ஆற்றியிருக்கவேண்டிய அமை வையும் காட்டுகிறார் வள்ளுவர். இவையனைத்தும் காதலின் மென்மைத் தன்மையை யும், அதைத் துய்த்து அதன் வழி இன்பம் பெறுவார் நிலைமையும் நன்கு காட்டுகின்றன வன்றோ! இறுதியாக வள்ளுவர் காட்டும் ஊடலையும் கண்டு நாமும் அமைவோம். இடையில் விட்டுப் பிரிந்த தலைவன் வரும் காலத்தில் தலைவி உண்மையில் மகிழ்வாள். எனி னும் அவனிடம் பொய்யாக மாறுபட்டுக் காய்வாள். தன்னை அவன் விட்டுப் பிரிந்தது தக்கதன்று எனத் தன் செயல் மூலம் காட்டுவாள். எனினும் அந்த ஊடல் அல்லது சிறு மாறுபாட்டு நிகழ்ச்சி நீட்டிக்கக்கூடாது என எச்சரிக்கை செய்கின்றார் வள்ளுவர். உண்மையில் நீட்டிக்கவும் முடியாது. 'என்று காண்போம்' என ஏங்கிய தலைவியின் உள்ளமும், எச் செயல் புரியினும் தலைவியை மறவாத தலைவனின் நெஞ்சமும் எப்படிக் கண்டபின் கட்டி மகிழாமல் பிரிய நினைக்க முடியும்? எனினும் உள்ளத்துச் சிறு ஊடல் தோன்றின் அந்த மகிழ்வு இன்னும் சிறக்கும் அல்லவா! அந்த மகிழ்ச்சி எல்லையற்றது. எனினும் இடை யில் தோன்றும் சிறு புலவி நீட்டித்தலாகாது என்கின்றார் வள்ளுவர். அது அமைய வேண்டிய எல்லைக்கு அவர் காட்டும் உவமை சிறந்த வொன்றாகும். நமது உணவுக்கு உப்பு அவசியம். உப்பில்லாப் பண்டம் குப்பையிலே தான் கொட்டப்படுகின்றது. உப்பை அளவு அறிந்து சேர்க்கவேண்டும். அது குறைந் தாலும் பண்டம் கெடும்; மிகுந்தாலும் அப்படியே. எனவே அளவறிந்து அதைச் சேர்க்க வேண்டும். காதல் இடையில் கையாளவேண்டிய புலவியும் அத்தகையதே. காதலருக்கு இடையில் புலவி இல்லையாயினும் கூடல்