பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வள்ளுவர் காட்டிய காதல் வெறி 119 இன்பம் குறையும்: புலவி நளினும் இன்பம் கெடும். இந்த உண்லமயை வள்ளுவர். * உப்பமைந் தற்றால் புலவி, அது சிறிது (1032) மிக்கற்றால் நீள விடல்' என்கின்றார். இப்புலவி இல்லையாயின் காமம்-கனியை ஒத்த காமம் - அழுகிய பழமாகவோ அன்றிப் பயனற்ற பிஞ் சாகவோ கெட்டு விடும் என் பதை மற்றோர் உவமையினாலே வள்ளுவர் நன்றாக விளக்குகிறார். ' துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று' (1306) இவ்வாறு புலக்கும் நிலை தலைவியர் மாட்டே உண்டு எனக் காட்டுகின்றார் வள்ளுவர். இன்றைய உலகத் திலும் இவ்வுண்மையைக் காண முடியுமன்றோ! ஆடவரைக் காட்டிலும், பெண்கள் தாம் ஊடும் நிலையில் ஊடிக் கணவரிடம் தம் கருத்து முற்றுப் பெற வழி செய்து கொள்ளுகின்றனர். இதைப் புலவி நுணுக்கம் என்னும் அதிகாரத்தால் வள்ளுவர் காட்டுகின்றார். ஒவ்வொரு குறளும் சிறந்த வகையில் அமைந்துள்ளது. தலைவனுடைய ஒவ்வொரு சொல்லிலும் குற்றங் காண் கிறாள் தலைவி; ஒவ்வொரு செயலிலும் குற்றங்காண் கின்றாள் அவள். இவற்றால் தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற நிலையைக் குத்திக் காட்டுகின்றாள் தலைவி அவை எல்லாம் எண்ணி எண்ணிப் பார்க்கின்ற தலைவன் தான் இனிப் பிரியாது கூடி வாழ்வதாக வாக்களித்து அவளுடன் கூடி மகிழ்ந் திருப்பான் அல்லனோ! இந்தப் புலவியின் பாங்கில் அமைந்த ஒரு குறளைத் தான் முதலிலே கண்டோம். பிரிந்த தலைவன் இனி இப் பிறவியில் மட்டுமன்றி எப்பிறவியிலும் பிரியலாகாது எனக்கருதிய தலைவி கண் கலங்கினாள் அல்லவா!