பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

120 கொய்த மலர்கள் அவள் உள்ளத்தின் பல கோணங்களைப் பலவகையில், காட்டுகின்றார் வள்ளுவர். தலைவன் தலைவியிடம் 'உன்னை நினைத்தேன்" என்றானாம். ஆனால் அதற்குத் தலைவி கண்ணீ ர் வடித் தாளாம். ஏன்? இதன் வழி வள்ளுவர் நல்ல உளப் பண்பைக் காட்டுகின்றார். ஒருவரை இடையில் மறந்தால் தானே நினைக்கத் தோன்றும். இடைவிடாது உள்ளத்தில் இடம் பெற்ற ஒருவரை மறத்தல் எங்கே? பின் நினைப்பதுதான் எங்கே? தலைவன் உளத்தில் தலைவி நிலைத்திருப்பின் அவன் நினைத்தேன் என்பானா? என வே தலைவி கலங்கு, கிறாள். • உள்ளினேன் என்றேன் மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லான் புலத்தக் கனள்' (1316 - என்பது குறள், இதை அறிந்த தலைவன், உலகில் தான் வேறு யாரையும் விரும்பவில்லை எனவும் யாரும் அவளுக்கு மேலாக அவன் உள்ளத்தில் இடம் பெறவில்லை எனவும் கூறி. அவளை மாற்ற முயன்றான். ஆனால் அதிலும் அவன் வெற்றி பெறவில்லை, யாரினும் என்றதால் தலைவனுக்குத் தன்னைப்போய் பலர் உளர் என்றும் அவருள் எல்லாம் தன்னைப் போற்றுகின்றான் என்றும் பொருள் கொண்டு, அப்படிக் கூறிய 'பிறர் யார்?' என்ற வினா எழுப்பி, அப் பிறரோடு சென்றது தக்கதோ எனப் புலக்கின்றாள் தலைவி. * யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று (1314) என்பது குறள். இதனால் தலைவியும் தலைவனும் ஒருவருக் கொருவராகவே ஒருவரை ஒருவர் பற்றி வாழ்த்தலே சிறந்தது என்ற உண்மையையும் வள்ளுவர் காட்டியுள்ளார். இவ்வாறே