பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

122 கொய்த மலர்கள் அந்த இன்பத்தை, பெற்ற அவ்விருவ ரல்லாது யாரே கூற வல்லார்? எனவே, வள்ளுவர் அவர் தம் ஊடலும் கூடலும் இயைந்த இராப்பொழுதை. அவர் தம் வாயாலேயே 'நீடுக' என வாழ்த்தித் தாமும் அவர்களிடம் இருந்து விடை பெறுகின்றனர். 'ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப் பெறும்' (317) என்றும், • ஊடுக மன்னோ ஒளி இழை; யாம் இரப்ப நீடுக மன்னோ இரா' (1319) என்றும் கூறி, இறுதியாக, ' ஊடுதல் காமத்துக்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்' (1330) என்று காட்டி, அவர் தம் இன்ப வாழ்வில் அவரை விட்டுத் தம் குறளையே முடித்துக் கொள்கிறார் வள்ளுவர். இதுவே * வள்ளுவர் காட்டிய காம வாழ்வு.' அவர் காட்டிய 250 குறட்பாக்களில் நான் ஒருசில வே எடுத்துக்காட்டினேன். இவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெரு நூலை அமைக்க உதவும். இன்னும் பிற குறட்பாக்களும் உயரிய நலம் பயப்பன. அவற்றையெல்லாம் வாய்ப்பு உள்ளவர் தனித்தனியாகப் பயின்று மகிழ்வார்களாக! இவ்வாறு காதல் என்பது உள்ளத்து உணர்வாக அமைவது என்பதும். அது ஒத்த பண்பும் நலமும் பிற நல்லியல்புகளும் பொருந்திய ஒருவன் ஒருத்தி மாட்டுத் தோன்றுவதென்பதும். அவ்வாறு தோன்றுவது திடீ ரெனத் தோன்றி மறைவது அன்று என்பதும், அக்காதல் பிறவி தோறும் தொன்று தொட்டு அடுத்து என்றும் வற்றது வளர்ந்து வருவது என்டதும், அவ்வாறு உள்ளத்தால் ஒன் றியவர் யாராலும் என்றும் பிரிக்க முடியாத பெரு