பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கொய்த மலர்கள்

காலத்துச் சிறந்த குடிசைத் தொழிலாக விளங்கியது நெசவேயாகும். பாவு இட்டு, வேட்டியும் துண்டும் புடவையும் பிறவும் நெய்து மக்களின் மானம்காக்க அளித்த அந்த நெய்தற்றொழில் இன்னும் நன்றாகப் பாதுகாக்கப்பெற வேண்டும்.

ஓய்ந்த நேரத்தில் உழவரும் பிறரும் நூற்று ஆடை நெய்து வந்த காலம் ஒன்றிருந்திருக்கும். எல்லா வீடுகளிலும் பெண்கள் அந்த அன்புப் பணியினை மேற் கொண்டிருந்திருப்பர். கால வெள்ளத்துக்கு இடையிலே அந்த நூற்று நெய்யும் தொழிலை ஒரு தனிப்பட்ட சமூகத்தாரே மேற்கொள்ள நேரிட்டது. பழங்கால நாட்டுக் குடிசைத் தொழிலாக வீடுதொறும் விளங்கிவந்த இந்த நெசவுத் தொழில் இன்று ஒரு தனிப்பட்ட சமூகத்தார் என்று சொல்லப்படும் வகையில் ஓரினத்தார் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களும் அந்தப் புனிதத் தொழிலைப் பல்வேறு சிக்கல்களுக்கும் மாறுபாடுகளுக்கும் இடையில் வளர்த்துக் கொண்டு தான் வருகிறார்கள். அவர் தம் திறமும் செயலும் சிறக்க என வாழ்த்துகிறேன்.

இந்திய அரசாங்கம் இன்று கைதொழில் வளர்ச்சி அடையப் பலவகையில் முயற்சி செய்கின்றதைக் காண்கி றோம். அம் முயற்சியின் வழி எத்தனையோ புள்ளி விவரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றின் துணை கொண்டு இன்றைய கைத்தறி வளர்ச்சிபற்றி ஒரு சிறிது காண்போம். இந்த நாட்டுக் கைத்தறியையும் அத் தொழில் வளத்தையும் புதுமுறையில் அமைத்து வளர்ப்ப தற்கான முயற்சி இந்திய அரசாங்கத்தாராலே 1851 லேயே தொடங்கப் பெற்றது. எனவே இன்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே அரசாங்கம் இத்துறையில் கவனம் செலுத்த விரும்பிற்று என்பதைக் காண மகிழ்ச்சி பிறக்கின்றது. இன்று இத்துறைக்கு வேண்டிய நூல் அத்தனையும் 'மில்'லிலே தான் தயார் செய்யப்படுகின்றது.