பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கைத்தறி ஆடைகள்

அன்று தொட்டு இன்று வரை அரசாங்கம் இத்துறை வளர எத்தனையோ வகையில் உதவி வருகின்றது. என்றாலும் பல்வேறு காரணங்களாலே இது வளர்ச்சி அடையவில்லை என்பதை நாம் நேரிலேயே காண முடிகின்றது.

இந்திய அரசாங்க விற்பனைத் திட்டம் இத் துறையை முழுக்க முழுக்க வளர்க்க வேண்டிய அளவுக்குச் செம்மையாக்கப் பெறவில்லை என்னலாம். அத்துடன் காட்டில் பெருகிவரும் 'மில்'களின் போட்டியே பெரிதாக உள்ளது. மற்றும் நாகரிகம் என்ற பெயராலே என்னென்ன வகை யிலே யோ மக்கள் உடை உடுக்க விரும்ப, அந்த விருப்பத்தையெல்லாம் கைத்தறியால் பூர்த்தி செய்ய முடியாத நிலையும் ஒன்று. ஆம்! புறத்துறுப்புக்களை வெளிக்காட்ட லாகாது என்ற பண்பாட்டு முறைக்கு முதல் முதல் அமைந்த ஆடையானது- மனிதனைப் பிறவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டத் தோன்றிய ஆடையானதுஅவனது சமுதாய வாழ்வின் ஒரு அங்கமாக அமைந்த ஆடையானது- இன்று அவனை அநாகரிகமாக, பிறவற்றினும் கேடாக, வழுக்கி விழும் வகையில் எங்கோ அழைத்துச் செல்லுகின்றது. தம் உடம்பைப் பிறர் காண லாகாது என்ற பண்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஆடை, தம்மைப் பிறர் எந்தக் கோணத்தில் கண்டாலும் காமுரத்தக்க வகையில் அமைந்து. மனிதனைப் பண்பற்ற அழுக்குச் சேற்றுள் வழுக்கி விழச் செய்கிறது. அதற்கு இன்று என்னென்னவோ பெயர்களைச் செல்லுகிறார்கள் ' இதுதான் இன்றைய நாகரிகத்தின் கோலம் போலும். ஆம்! இந்தப் பண்புகெட்ட வழிக்கு மனிதனைத் தள்ள விரும்பாத கைத்தறி அவன் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை தான். எனவே அவனும் அவளும் வேறு ’மில்' உறவை நாடுகிறார்கள், அதற்காகக் கைத்தறி தன்மான-