பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உள்ளும் புறமும் 135 றும் இங்கொன்றுமாகச் சில கொடுமைகள் பழந்தமிழ் மக்கள் வாழ்வில் காணப்படினும், பொதுவாக அவர் தம் சமூதாய வாழ்க்கை செம்மை நெறியிலே சென்றுகொண் டிருந்தது. அவர்கள் உள்ளொன்று வைத்துப் புற மொன்று பேசாது, உள்ளும் புறமும் ஒத்த உணர்வி லேயே சிறந்து வாழ்ந்தார்கள் என்பதைப் பல சங்க கால இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. சங்க இலக்கியங்களுள் புறம்பற்றிய சிறந்த இலக்கியம் புற நானூறு என்பது நாடறிந்ததே. அதில் இத்தகைய நல்லுணர்வாளர் பலர் முன் கொண்டு வந்து காட்டப்படு பெறுகின்றனர். நாட்டு வாழ்க்கையையும் வீட்டு வாழ்க் கையையும் அங்கே ஒன்றியதாகவே காணமுடிகின்றது, ஒரு சில இடங்களில் அவர் தம் உணர்ச்சி உயர்ந்த மனிதப் பண்பின் எல்லையினையும் தாண்டி மேலோங்கி நிற்கின்றது. அவற்றில் ஒன்றிரண்டு கண்டு அமைவோம். ' புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் கட்பாம் கிழமை தரும் ' என்ற குறளுக்கு எடுத்துக் காட்டாகப் பரிமேலழகர் கோப்பெருஞ் சோழனையும் பிசிராந்தையாரையும் காட்டுகிறார். அவர்கள் பற்றி நாடு நன்கறிந்துள்ளது. முன்பின் காணாத பிசிராந்தையாரிடம் உணர்ச்சியால் பழகிய கோப்பெருஞ் சோழன், தான் வடக் கிருக்கும் காலத்தில் தவறாது அவர் வருவார் என நினைத்துப் பேசியதும், அப்படியே அவர் வந்து சேர்ந்ததும் நாடறிந்த வரலாறே யாகும். ஆகவே அதுபற்றி நாம் இங்குப் பேச வேண்டா. உள்ளும் புறமும் ஒத்தவர்கள் எப்படி உணர்ச்சி ஒத்துப் பழகினார்கள் என் பதையும், ஒருவர் நினைத்தபடி மற்றவர் வந்தார் என்பதையும் பலர் காட்டுக்கு நன்கு காட்டியுள்ளனர். கோப்பெருஞ் சோழன் பிசிராந்தையாரைக் குறிக்கும் காலை.