பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

136 கொய்த மலர்கள் • செல்வக் காலை நிற்பினும், அல்லற் காலை நில்லான் மன்னே ' என்று கூறி, வாழ்வில் இன்றேனும் தாழ்வில் உற்றவர் வருவார்கள் என்ற உண்மையை விளக்கினான். நான் இங்கே காட்ட விழைந்தது அவர் தம் ஒருமை) உணர்வினையேயாம்; உள்ளும் புறமும் ஒத்த ஒன்றையே யாம். இருவரும் உணர்ச்சியால் ஒத்த பிறகு அவர் தம் உள்ளும் புறமும் ஒத்ததாகவே அமைவதைக் காணல் வேண்டும். பிசிராந்தையாரை முன்பின் நேரில் கண்டறியாது போயினும் உணர்ச்சியால் உற்றறிந்த சோழன் அவரைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவுறுத்திய ஒன்றே அவர் தம் இருமை உணர்வை இல்லையாக்குவதாகும். கலந்து பழகிய பின்பு இருவரில் எந்த வேற்றுமையைக் காட்டமுடியும்? * அவனே நான், நானே அவன்' என்று 'கண் இரண்டும் ஒன்றையே காணும்' நிலைபெற்றபின், வேறு பாட்டுக்கு இடம் எங்கே? இங்கே சோழன் தனக்கும் புலவருக்கும் வேறுபாடு கண்டான் இல்லை. இந்த உண்மையைச் சோழன் தன் வாக்காலேயே காட்டுகிறான். * தன்பெயர் சிறக்கும் காலை, 'என் பெயர் பேதைச் சோழன்' என்னும் சிறந்த காதற்கிழமை உடையன், அதன்தலை இன்னதோர் காலை நில்லலன் இன்னே வருவன் ஒழிக்க அவர்க்கு இடமே.' (புறம் 216) என்று சோழன் கூறுவதால் நாம் உயர்ந்த பண்பாட்டினை உணர முடிகின்றதன்றோ! தன் பெயரைச் சோழன் பெய ராகவே கொண்டு தமக்குள் வேறுபாடு காணாத அன்புரிமை உடைய புலவர் அச்சோழன் துன்புறுங்காலை வாராதிருப் பாரோ! வந்து உடன் வடக்கிருந்தா ரன்றோ!