பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உள்ளும் புறமும் 137 இருவர் உளம் விட்டுப் பழகு தலைக் 'காதற் கிழமை எனல் மரபு. அது. கால வழக்கில் ஆண், பெண் உள மாற்றத்துக்கு அமைந்த ஒன்றாகிவிட்டது. எனினும் 'காதல்' பழங்காலத்து எந்த உள்ளங்களும் கலந்த கெழ்ச் சிக்கும் அமைந்த பொதுப்பெயராகவே இருந்தது. அந்தச் *செம்புலப் பெயல் நீர்போல'க் கலந்த உள்ளங்கள் காணும் இன்பமே காதல் இன்பம். அந்த இன்ப நிலையில் 'நீ வேறு. கான் வேறு, என்ற வேறுபாடு தோன்றுமோ? இந்த உண்மையைத்தான் கோப்பெருஞ்சோழன் அவ்வாறு அழகுபடக் காட்டுகின்றான். இது நாடறிந்த வரலாறு, எனினும், இதனினும் சிறந்த காதற்கிழமை பொருந்திய வரலாறு இதே புற நானூற்றில் இடம்பெற்றுள்ளது. இன்று நான் காட்ட விழைந்தது அதையேயாகும். புறநானூற்றில் ஒரு சில புலவரைத்தான் இன்றைய அறிஞர்கள் நாடறிந்தவராக்கு கின்றார்கள், ஒரு சிலர் எங்கேயோ அமைதியாகப் பகட்டு வாழ்வுக்கு இடங்கொடாமல் அவர் தம் பாடல் வழிப் பணிபுரிகின்றனர். அத்தகைய அமைதிப் புலமை ருள்ளே கள்ளில் ஆத்திரையனார் ஒருவர். 'கள்ளில்' அவருடைய ஊர்போலும். ஆதிரை நாளில் பிறந்ததனால் ஆதிரையனாராகி இருக்கலாம். அவர் இந்த உள்ளும் புறமும் ஒத்த காதற்கிழமையை நன்கு விளக்குகின்றார். அகப்பொருள் பாடும் புலவர்கள் இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தும் சிறப்புக்களை பலவாறு பாராட்டுவார் கள், 'அவன் நெஞ்சில் அவள்'; 'அவள் நெஞ்சில் அவன்'; இதுவே அகப்பொருள் காதல் வாழ்வு, ஆம்! இதே காதல் வாழ்வைப்புறப் பொருளில் காட்டுகிறார் ஆத்திரையனார். 'என் நெஞ்சம் திறப்போர் நிறகாண்குவர்' என்ற அடியைப் படிக்கும்போது, இது எங்கோ குறுந்தொகையிலோ அன்றி நற்றிணையிலோ உள்ள அடி