பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உள்ளும் புறமும் 139 நின்யான் மறப்பின், மறக்குங் காலை என்உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும் என்னையான் மறப்பின் மறக்குவன்' (புறம் 173) இந்த ஆதனூங்கன் தமிழ் நாட்டு வட எல்லையில் வேங்கடத் துக்கு அப்பால் இருந்தவன் ; மோரியர் காலத்தவன். அவ்வடவேந்தரைத் தமிழகம் வரவிடாது தடுத்தவன், அவனை நினைக்கும்போது, அவன் மோரியர் திகிரியைத் திரிதரக் குறைத்த புகழும் அவனுடைய ஞாயிறு அன்ன அறவாழ்வும் அவர் முன் தோன்ற, அவற்றைக் காட்டித் தன்பாடலை முடிக்கின்றார் புலவர். நாமும் இத்துடன் அமைவோம்.