பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

15. மாணவர் நல்லவரே நாள்தோறும் நாளிதழைப் புரட்டிப் பார்க்கும் காலம் இது. அதில் எத்தனையோ செய்திகள் வருகின்றன. ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவகைச் செய்தி தேவைப் படுகின்றது. எனினும் யாருக்கும் வேண்டாத யாராலும் விரும்பப்படாத சில செய்திகளும் வந்து கொண்டே இருக்கின்றன. அவ்வாறான செய்திகளுள் ஒன்று அண்மையில் அடிக்கடி வந்துக்கொண்டிருக்கிறது. அது தான் மாணவர்களைப் பற்றியது. காசிமுதல் கன்னியா குமரிவரையில், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் மாணவர் முறை தவறி நடந்தார்கள் என்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அத் தகைய செய்தி வந்த அன்றைய காலை இதழைப் படித் தேன். பலவிடங்களில் மாணவர் போராட்டம் நிகழ்ந்த தாகச் செய்திகள் இருந்தன. இரவு உணவு உண்டு படுக்கச் செல்லுமுன் அதைப் படித்தேன். அதனால் சிந்தனை நீண்டது. அன்று இரவு எனக்கு நெடுநேரம் தூக்கமே வரவில்லை. 'மாணவர்கள் கெட்டுவிட்டார்கள்' என்று பெருந்தலைவர் முதல் சாதாரண ஊழியர்வரை இன்று பேசுகிறார்களே! அதன் அடிப்படை என்ன? என்று அத் தூக்கமற்ற வேளையில் என் மனம் ஆராயத் தொடங்கிற்று. தமிழ் நாட்டில் மட்டுமன்றிப் பரந்த பாரதநாட்டிலேயே பல இடங்களில் மாணவர் முறைதவறி நடக்கின்றார்கள் என்ற செய்திகளை அடிக்கடி நாளிதழ்களில் காண் கிறோமோ வடக்கே காசிச் சர்வகலாசாலை சில காலம் மூடப்பட்டுக் கிடந்தது. கேரள நாட்டில் மாணவர் சிறு