பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16. கவிஞன் யார்? உலகில் சாகா வரம்பெற்று வாழ்பவன் கவிஞனே யாவன். காலம் இடையிட்டும் அவன் நிலையுற்ற வாழ்க்கையைப் பெற்றுவிட்டான். ஊழிதோறூழி எத்தனை எத்தனையோ பொருள்கள் தாம் இருந்த இடத்தின் சாயல்கூடத் தெரியாத வழி அழிந்துபோயின என்றாலும் கவிஞன் தன் கவிதைமூலம் அவ்வூழிகளையெல்லாம் வென்று நிலைத்து வாழ்வதை நாம் காண்கின்றோம். பாரனைத்தும் போற்றச் சிறந்திருந்த புகார் நகரம் இன்று இல்லை? அதன் சுவட்டைக் காணவும் வழியில்லை. ஆனால் அதைப் பாராட்டிய பட்டினப்பாலை இன்று வாழ்கின்றது. என்றும் வாழும். ஆம் அப்பட்டினப்பாலையின் வழி அதை இயற்றிய புலவன் - கவிஞன் உருத்திரங்கண்ணன் நிலைத்து வாழ்ந்து வருகின்றான் அல்லனோ அவ்வாறு என்றென்றும் நிலை பெற்று வாழும் கவிஞன் யார்? அவன் நிலை என்ன? எப்படி? அவனை அவ்வாறு வாழவைப்பது எது? இவைபற்றி எல்லாம் எண்ணிப் பார்ப்பின் உண்மைக் கவிஞனுடைய உயர் நலம் நன்கு புலனாகுமன்றோ கவிஞன் பிறப்பவனா? அன்றி ஆக்கப்படுபவனா? பலரும் அவன் பிறப்பவனே என்று சொல்லுகின்றனர், அதன் கருத்தென்ன? பிறக்கும்போதே கவி பாடிக் கொண்டே பிறக்கிறான் என்று சொல்வதா? அது எவ் வாறு பொருந்தும்? ஆயினும் கவிஞன் இலக்கணங்களைப் பயின்று, எதுகையும் மோனையும், இணைக்கும் வகை கற்று, சீரும் அசையும் தெரிந்து, அதன் படி பாடுபவனா

  • தென்றல் கவிஞர் மலரிலிருந்து (6-8-60)