பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

150 கொய்த மலர்கள் திறனும் விரிந்த நல் கோக்கும் உடையவனாகி, அவற்றை உலகுக்குத் தெள்ளத்தெளியக் காட்டி விளக்குபவனாக இருக்க வேண்டும் என்று கவிஞனுக்கு இலக்கணம் கூறு வர் மேலைநாட்டு அறிஞர். அவன் கண்ணுக்கு வானோங்கிய இமயமலையும் ஒன்றுதான், நெளிந்து செல்லும் சிறு நாங்கூழ்ப் புழுவும் ஒன்றுதான். உயர்ந்த இமயத்தை அண்ணாந்து நோக்கும் போது, 'மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்று வீறு தோன்றப் பாடுகின்றது அவன் வாய். ஊர்ந்து செல்லும் உலையாத நாங்கூழ்ப் புழுவை நோக்கும் போது ‘ஓஓ நாங்கூழ்ப் புழுவே, உன்பாடு ஓவாப் பாடே" எனப் பாராட்டி வியக்கிறது அவன் வாய். அவனுடைய உயரிய உள்ளத்திலே அனைத்தும் வேறுபாடற்ற சமநிலையில் காட்சி அளிக்கும். அக் காட்சிவழி கற்பனை மிதக்கும். கற்பனை முற்றிக் கவிதையாக உருப்பெற்று ஓடி வந்து உலகுக்கு நல்லமுதூட்டும். அதன் வழி உலகம் நலம் பெறும். இதைத் தான் இந்த நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞன் பாரதி. * உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப்பெருக்கும் கவிப் பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருந்த குருடரெலாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்' வாழ்விப்பன் உண்மையில் உயரிய கவிதைகளும் அவற்றை ஆக்கிய கவிஞர்களுமே யாவர். இன்று தமிழர் தம் தொன்மையையும் பண்பையும் நாகரிகத்தையும் பாராட் டக் காரணமாயிருப்பவர் சங்க காலக் கவிஞர்களே யன்றி வேறு யார்? வாழும் கவி மற்றவர் உள்ளங்களைத் தொட வேண் டும் என்று கண்டோமல்லவா! அவ்வாறு தொடுவதற்கு,