பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கவிஞன் யார்? 151 அதில் நல்ல கருத்துக்கள் அமைந்திருக்க வேண்டும். வெறும் சொற்களை மட்டும் அடக்கி எதுகை மோனை இட்டுக் கவியாக்குவர்களேயானால் அவை நெடுங்காலம் வாழா என்பதை வரலாறு காட்டுகின்றது. ஆனால் பொருள் நலத்தைப் பொருந்த வைத்து, இழுமென் மொழி யால் இன்பக் கவிதை தீட்டினால், தீட்டுவார் இயற்பெயர் மாய்ந்து விட்டாலும் அவருக்குக் கவிதை தன்வழி ஒரு புதுப் பெயரை இட்டு உலகில் வாழ வைக்கும் என்பது உண்மை . சங்க காலச் 'செம்புலப் பெயல் நீராரும்' -தேய் புரிப் பழங்கயிற்றாரும்' அவ்வாறு இன்றும் வாழ்கின்ற வர்களன்றோ! எனவே, கவிதைக்கு வெறும் சொற்களைக் காட்டிலும் பொருளே இன்றியமையாது வேண்டப்படுவது. இதைத் தான் 'யாப்பு' என்ன என்பதை விளக்க வந்த இடத்தில் தொல்காப்பியனார். • எழுத்து முதலா ஈண்டிய அடியில் குறித்த பொருளை முடிய நாட்டல் யாப்பென மொழிப யாப்பறி புலவர்' (பொருள் 384) எனப் பொருளை முற்றக் காட்டவேண்டிய தன்மையை விளக்கிக் காட்டினார். எனவே கவிஞன் சிறந்த பொருளின் அடிப்படையிலேயே தனது கவியை எழுத வேண்டும் என்பது தெளிவு. பொருளே கவிதைக்குச் சிறந்தது என்றாலும், அந்தப் பொருளின் நிலைக்கேற்ற நல்ல சொற்களையே கவிஞன் தன் கவிதைக்குத் தேர்ந் தெடுக்க வேண்டுவதும் இன்றியமை யாததாகின்றது. எனவே, சொல்லும் பொருளும் பின்னி யதே கவிதை. அது கவிஞன் உயர் உள்ளத்தின் அடிப் படையில் அமைவது. இவ்வாறு பாடும் கவிஞன து கவியின் ஆழத்தை அளந்தறிதல் கடினமே ஒ ரே குறளுக்கு எத்தனை எத்தனை புதுப் பொருள்கள் காலந்தோறும் கண்டு கொண்டே இருக்கின்றோம். அதே வேளையில் அந்தப்