பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

158 கொய்த மலர்கள் கிக் காட்டுகின்றன. மகேந்திர பல்லவனாகிய பெரு மன்னனே ஒரு நாடகப் பிரியனாக இருந்தான் என்றும், அவனே 'மத்தவிலாசப்ரகசனம்' என்ற நாடக நூலை இயற்றினான் என்றும் காண்கின்றோம். பலலவர் காலத் திலே நாடகமும் நடனமும் கோவில் தொறும் ஊர் தொறும் நடை பெற்று வந்தன எனக் காண முடிகின்றது. அக்காலத்தில் உண்டான இலக்கியங்கள் கோயில்களை மையமாகக் கொண்ட சமய இலக்கியங்களேயானாலும், அவற்றிலிருந்து அக் கோயில்களே நாடகங்களுக்கும் நடனங்களுக்கும் முக்கிய இடங்களாக அமைந்தன எனக் காணமுடிகின்றது. அடுத்துச் சோழர் காலத்தில் நாட்டில் எத்தனையோ கலைகள் வளர்ந்தன. தமிழ் நாட்டு வரலாற்றில் அக் காலத்தைப் பொற்காலம் என்பார்கள். அக்காலத்தில் நாடகம் ஓரளவு நாட்டில் நன்கு உலவிற்று என்னலாம். அக்காலத்தில் சிறந்த அரசனாக விளங்கிய இராசராசான் காலத்தும், அதற்குப் பிறகும், அவன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலில் 'இராஜ ராஜ விலாசம்' என்ற நாடகம் நடைபெற்றதாகக் கல்வெட்டுக்கள் மூலம் அறிகிறோம். அக்காலத்தில் 'நொண்டி நாடகம்' என ஒன்று நடை பெற்றதாகவும் தெரிகின்றது. அவை எல்லாம் இப் போது கிடைக்கவில்லை, அக்காலத்திய இலக்கியங்களாகக் கொள்ளும் சயங் கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணியும், ஓட்டக் கூத்தர் பாடிய உலாக்களும், அவை போன்ற சிலவும் நாடக அமைப்பிலே உள்ளமையை இன்றும் அவற்றைப் படிப்பவர்கள் நன்கு அறிவார் களன்றோ! அக்காலத்துக்குப் பிறகும் ஒரு சில நூற்றாண்டு களுக்கு முன்னும், சென்ற நூற்றாண்டிலும், பள்ளு, குறவஞ்சி போன்ற இலக்கியங்கள் நாடக அமைப் பிலேயே எழுதப் பெற்றன. வயலில் வேலை செய்யும் பள்ளரின் வாழ்வீனை மையமாகக் கொண்டு டள்ளும், மலையில் வாழும் குறவரை மையமாகக்கொண்டு குறவஞ்சி யும் எழுதப் பெற்றன; அவற்றுள் ஒருசில இன்னும் வாழ்கின்றன. ஒரு சில நாடகமாகவும் நடிக்கப் பெறு