பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைத்தறி ஆடைகள்

________________

15

மனிதனுடைய வாழ்வில் ஆடை இன்றியமையாதது எனக் கண்டோம். இந்தியாவில் மனிதனது ஆடையை அரசாங்கம் கணக்கிட்டிருக்கிறது. ஒ ருவனுடைய வாழ்க்கைச் செலவு நூறு எனக் கொண்டால் உணவுக்கு மூன்றில் இரண்டு பாகமும் (661%) உடைக்கு 9.7 பாக முன் செலவாகிறது என்பர் , இர் தியா முழுதுக்கும் சராசரி ஆண்டுக்கு ஒருவன் 21 ரூபாய்க்கு ஆடை வாங்கு வதாகக் கணக்கிட்டுள்ளனர். தென் இந்தியாவில் ரூ. 19-50 க்குத் தான் ஒருவர் ஆடைக்காக ஆண் டொன்றுக்கு செலவு செய்கிறார். 1958ம் ஆண்டின் கணக்குப்படி, ஒருவர் 16.7 கஜம் துணி வாங்கி இருக்கிறார் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள். இது நாளடைவில் வளர்ச்சி அடையும் என எதிர் நோக்குகின்றனர். இரண் டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தனி மனிதனுக்குச் சராசரி ஆண்டுக்கு 18.5 கஜம் துணி தேவையாகும் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள். இந்தக் கணக்கின் அடிப்படை யில் அரசாங்கத்தார் ஆலைகளும், கைத்தறிகளும். விசைத் தறிகளும் இவ்வளவு இவ்வளவு கஜர் தான் தயாரிக்க வேண்டும் என வரையறுத்தனர். அதன்படி 50 000 லட்சம் கஜம் ஆலைகளும், 15,000 லட்சம் கஜம் கைத்தறி களும், 2000 லட்சம் கஜம் விசைத்தறிகளும் ஆடைகள் தயார் செய்ய வேண்டும் இந்த வளர்ச்சியின்படி ஆலைகள் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்ட இறுதியில் 1961ல் 53500 வட்சம் கஜம் துணி தயாரிக்க வேண்டும். ஆனால் ஆலைகள் முதலாண்டின் இறுதியிலேயே 1957 இல் 53060 லட்சம் கஜம் துணி தயார் செய்து அளவை மீறத்தொடங்கின. அதற்கென ஆலைகள் காட்டும் கணக்கு தனிமனித னுக்கு, 23 கஜம் தேவைப்படும் என்பதாகும். ஆயினும் அரசாங்கக் கணக்காகிய 18.5 கஜ எல்லையிலேயே மக்கள் எட்டாது 167 கஜ அளவில் தான் நிற்கின்ற னர். ஒருவேளை 1961ல் 17.5 கஜ அளவிற்கு,