பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைத்தறி ஆடைகள்

________________


17 யாகும் என்றும் கணக்கிட்டு அதற்கேற்பவே ஆலைகளுக் கும் கைத்தறிக்கும் அளவு அமைப்பது தக்கதாகும். இந்தக் கைத்தறிகளை நம்பி வாழும் மக்களைப்பற்றியும் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தியாவில் எண்பது லட்சம் நெசவாளர் களும், அவர்களுக்குத் துணையாக ஒன்றரைக்கோடி மக்களும் வாழ்கின்றார் எனக் கணக்கிட் டிருக்கின்றனர். இவர்களே காட்டின் தேவையில் நான்கில் ஒரு பகு தியான ஆடைகளை நெய்து தருகிறார்கள், இவர் களே ஆண்டில் குறைந்து இருநூறு நாட்களாவது தறியில் அமர்ந்து வேலை செய்ய வேண்டும் ஒரு நாளைக்கு அவரவர் திறனுக்கு ஏற்ப ஆறு அல்லது எட்டு மணி நேரமாவது வேலை செய்தாக வேண்டும். இப்படி நெசவாளர் தொடர்ந்து உழைத்து தமக்கு வேண்டிய ஊதியத்தைத் தேடிக்கொண்டு, மற்றவர் மானத்தையும் காத்து வருகின் றார்கள். இந்த நெசவாளிகளில் பெரும்பாலோர் தென்னாட் டிலே-அதிலும் தமிழ் நாட்டிலே தான் வாழ்கின்றார்கள். இந்தியாவில் உள்ள கைத்தறிகளைக் கணக்கெடுத்தபடி இங்கே நாடு முழுவதிலும் 21 லட்சம் தறிகள் உள்ளன வாம். அவற்றுள் பாதிக்கு மேல் - 121 லட்சம் தென் இந்தியாவில் உள்ளன. தமிழ் காட்டில் மட்டும் 51 லட்சம் உள்ளன. அதில் 11 லட்சம் சேலம் மாவட்டத்தில் மட்டும் உள்ளன. ஆந்திராவில் 4 லட்சம் தறிகளும், கேரளத்தில் 80 ஆயிரம் தறிகளும், மைசூரில் 35 ஆயிரம் தறிகளும் உள்ளன. எனவே தென்னாடு --அதிலும் சிறப்பாகத் தமிழ்நாடு கைத்தறியில் கருத்திருத்த வேண்டும் என்பதை அறிய வேண்டும் இனி இர்தக் கைத்தறித் தொழிலை இந்திய அரசாங்க மும் நம் சென்னை அரசாங்கமும் எவ்வெவ்வாறு வளர்த்தன என்பதை ஒரு சிறிது காணலாம். 1851லேயே தற்கால முறையில் இத்துறையை வளர்க்க முயற்சி எடுத்தது.