பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொய்த மலர்கள்

________________

18 கொய்த மலர்கள் என்று மேலே கண் டோம். அந்த நாள் தொடங்கி மெல்ல மெல்ல அரசாங்கம் இத்துறையில் ஓரளவாவது கருத்திருத்தித்தான் இருக்க வேண்டும். எனினும் 1930க்கு முன் அரசாங்கம் செய்த உதவிகளைப் பற்றித் திட்டமாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. 1930ல் இத்தொழில் 1943ல் இதன் வளர்ச்சியையும் நிலையையும் பிறவற்றையும் ஆராய்ந்து அறிய ஓர் உட்குழுவை (Committee) அமைத்தது. அடுத்து 1948ல் குடிசைத் தொழிலுக்கெனவே ஒரு தனிச் சபையை (Board) அமைத்து, இத்தொழில் பற்றி ஆராய்ந்தது. 1949ல் கைத்தறிக்கென வே தனி உட்குழு அமைக்கப் பெற்றது. இதற்கிடையில் சென்னையில் கைத்தறிக் கூட்டுறவாளர் சங்கம் 1935ல் தொடங்கப் பெற்றது. அதே அடிப்படையில் 1950ல் அகில இந்தியக் கைத்தறி அவை (All India Handloom Board) இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பெற்றது. அடுத்து 1950 மே மாதத்தில் கைத்தறி பல்வேறு இன்னல்களுக்கு உள்ளான காலத்தில், சில ஆடைகளைத் தனியாகக் கைத்தறிக்கே ஒதுக்க வேண்டு மெனத் திட்டமிட்டு அவ்வாறு தொழிற் படவும் வழி செய்தது. 'லுங்கி' போன்ற ஆடைகள் கைத்தறிகளுக்கே ஒதுக்கப்பட்டன. பின்னர்க் கரை யிட்ட புடவை, வேட்டி முதலியவற்றையும் கைத்தறிக்கே ஒதுக்குவதாகத் திட்டமிட்டது. இப்படி ஒரு சில வகையில் அரசாங்கம் கைத்தறி வளரப் பெரு முயற்சி செய்தது; என்றாலும்... இத்தனை முயற்சிகளுக்கிடையிலும் கைத்தறி வளர்ச்? அடையவில்லை. 1953ல் சென்னை அரசாங்கம் தென் எல்லையில் வாழும் சுமார் அரைகோடி நெசவாளிகளுக்கு உதவி காண விரும்பி, அதுபற்றி மத்திய அரசாங்கத்துக்கு விண்ணப்பித்துக் கொண்டது. அதற்காக ஒர் குழுவும் அவ்வாண்டு அமைக்கப்பட்டது. போட்டியிட்ட ஆலையி