பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைத்தறி ஆடைகள்

________________


19 லிருந்தே கைத்தறியை வாழவைக்க நினைத்தனர் அரசாங் கத்தார். எனவே ஆலைகளில் தயாராகும் துணிகளில் கஜத்தக்கு மூன்று பை வீதம் எடுத்து, அதைக் கைத தறி வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்தனர். அதன்படி ஓரளவு கைத்தறித் துணிக்கு உதவி வந்ததோடு, வாங்குவோருக்குக் குறைந்த விலைக்குக் கைத்தறி ஆடைகள் கிடைக்கும் வகையிலும் அரசாங்கம் அந்த உதவியை நன்கு பயன்படுத்தியது. இப்படி அரசாங்க உதவி பெற்று, ஓரளவு இக் கைத்தறித்துறை வாழ்ந்து வருகிறது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் கைத்தறிக் குழு இந்திய அரசாங்கத்தை 100 கோடி ரூபாய் கேட்டது முழுதும் பெறவில்லை என்றாலும் ஓரளவு பெற்று இந்தத்திட்டத்தில் அந்தக் குழு கைத்தறி வளர ஆவன செய்து வருகிறது இதற்கிடையில் இங்கு நான் முக்கியமாகக் குறிக்க வேண்டியது ஒன்று உண்டு. அது தான் கூட்டுறவு முறை யில் இக்கைத்தறியை வளர்த்த சிறப்பாகும், இக்கைத் தறி வளர்க்க அவ்வப்போது பல குழுக்கள் அமைக்கப் பெற்றன. அவற்றுள் கணுங்கோ (Kanungo) குழுவும் கார் வே (Karve) குழுவும் முக்கியமானவை. அவற்றுள் பின்னது 1953-ல் அமைக்கப்பட்டது. அது கைத்தறி யைக் கூட்டு றவு மூலமே வளர்க்க முடியும் என்று திட்டமாக நம்பி அரசாங்கத்துக்கும் தெரிவித்தது, சென்னை மாநிலத்தில் அதற்கு இருபதாண்டுகளுக்கு முன்பே தொடங்கிய இக்கூட்டுறவுக் கைத்தறி இயக்கம் நன்கு தொழிற்பட்டு வந்தது. ஆயினும் நாட்டுப் பொது நிலை அதையும் தாக்கிற்று என்னலாம், என்றாலும் அதனால் தளராது நிலைத்துப் பணியாற்றிய தின் மூலம், இன்று இச்சென்னை மாநிலக் கூட்டுறவு நெசவாளர் சங்கம் சிறந்த தொண்டாற்றுகின்றது எனலாம். இச் சென்னை மாநிலக் கூட்டுறவு நெசவாளர் சங்கம் நாட்டுக்குச் செய்யும் தொண்டு பெரிது. 1935-ல்