பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொய்த மலர்கள் 4. வெறும் கைத்தறி நெசவு செய்வதைக்காட்டிலும் கால்வழி மிதித்துச் செய்யும் தறிகளை வளர்க்கும் வழி களைக் கண்டு. விரைந்து நாடு முழுவதும் அத்துறையில் திருத்தம் காண வேண்டும். (இதில் வேலை செய்தால் விரைவில் சோர்வு உண்டாகாது. 8 மணிக்குமேல் வேலை செய்யலாம், நாளைக்கு 18 கெஜத்துக்கு மேலும் செய்யலாம்.) 5. வெளி நாட்டிலும் நம் நாட்டிலும் மனித ஆசை யின் அடிப்படையில், நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்றும் வகையில் நல்ல ஆடைகளைத் தயாரிக்கக் கைத் தறிக்கு உதவ வேண்டும். அதே வேளையில மிருக உணர்ச்சி வழிபட்டு அநாகரிகமான முறையில் ஆடைகளைத் தயாரிப்பவர் யாவராயினும் அவர்களைத் தடையிட்டு நிறுத்த வேண்டும். 6. மக்கள் வாழும் தட்பவெப்ப நிலைக் கேற்ப உடைகள் தேவையானமையின் அவற்றிற்கேற்ற வகையில் ஆடைகளைத் தயாரிக்கக் கைத்தறிகளை ஊக்க வேண்டும், 7, தேவைக்கு நிறைவு செய்யும் வகையில் கைத்தறி கள் தொழிற்பட உதவ வேண்டும். இப்படி இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம், எனக்கு முன்னும் இதே கருத்தை எத்தனையோ பேர் சொல்லியும் சென்றிருப்பர். என்றாலும் இவை யெல்லாம் என்று தொழிற்படுகிறதோ அன்று தான் நாடு நாடாகும். இந்தக் கைத்தறிக் கூட்டுறவாளர் சங்கம் அரசாங்கத்தின் முழு உதவியையும் மக்களின் முழு ஆதரவையும் பெற்று நாள் தோறும் சிறக்கவேண்டுமெனவும். இத்துறையில் வாழும் மக்கள் அனை வரும் துன்பமற்று வாழ்வின் தேவைகளைப் பெற்றுச் சிறக்க வேண்டுமெனவும் வாழ்த்தி என் உரையை முடித்துக்கொள்ளுகிறேன். கைத்தறி வாரம் சிறக்க அதன் வழி நாட்டு வளம் செழிக்க!