பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்ண ஆடைகள் 29 அழுக்குப் போக்கிக் கஞ்சியிட்டு உலர்த்திச் செம்மைப் படுத்தும் வழக்கம் மிகப்பழங்காலத்திலேயே இருந்தது என்பதும் தெளிவுறும். இவ்வாறு, வண்ணமும் மணமும் கொண்ட தூய ஆடையை அணிந்த ஆடவரும், பெண்டிரும் மிகப்பழங் கால முதலே தமிழகத்தில் சிறக்க வாழ்ந்தார்கள் என்பது தெளிவு. இந்த வண்ண வேலைப்பாடுகள் நாள் தோறும் வளர்ந்து கொண்டே வருகின்றன. இன்று நாட்டில் வண்ணமியற்றியும், இட்டும் ஆடைகளுக்கு அழ கூட்டும் திறன் பலவகையில் சிறக்கப் போற்றப் படுகின்றது. அதற்கெனச் சாயச்சாலைகளும், வண்ண அச்சுச் சாக்களும் நாட்டில் பலப்பலவாக வளர்ந்துள்ளன . 'சேலத்தே அத்தகைய வண்ணக்களஞ்சியத் தொழிற் சாலைகள் பல. அவற்றின் உரிமையாளர் கழக வெள்ளி விழாவில் இம் மலர் பூக்கிறது. மலர் பல்வேறு வண்ண ங் களுடன் மணம் வீசும் என்பது உறுதி. 'அவர் தம் வண்ணப்பணி வளமுற்றுச் சிறக்க' என்ற வாழ்த்தோடு இக்கட்டுரையை முடித்துக்கொள்ளுகிறேன்.