பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடையும் தையற்கலையும் என்று மனிதன் திருந்திய வாழ்வு பெறத் தொடங் கினானோ அன்றே அவன் காணத் தொடங்கினான். 'நாண் மனிதனுக்கு உரிய உயரிய பண்புகளுள் ஒன்று. நாணத்தை 'வெட்கம்' என்று பொருள் கொண்டு காட்டு வர். வெறும் வெட்கப்படுவது மட்டும் நாணாகாது. மற்றும் 'நாண்' பெண்களுக்கு உரிய நற்குணத்தில் ஒன்று என்பர், இருக்கலாம்; ஆனால் ஆண்களுக்கு நாணம் இல்லையா! ஏன் இல்லை? ' அறம் நாணத் தக்கது தான் நாணானாயின், பிறர் நாணத்தக்க துடைத்து' என வள்ளுவர் ஆடவர் மேலேற்றி யே நாணத்தைக் காட்டு கின்றார். நாணுடைமை என்றே ஓர் அதிகாரமும் திருக் குறளில் உள்ளது. நாணுடைமையாவது 'நீதியல்லாதது கண்டால் காணுதல்' எனப் பரிமேலழகர் உரை கூறுவர். இந்நாணம் உடலில் புறநிலை பற்றியும் அகநிலை பற்றி யும் நிகழ்வது. அகநிலையைப்பற்றியே வள்ளுவர் விளக்கிக் காட்டுகின்றார். அந்த அகநிலை ஒருசிலரிடமே அமைர் துள்ளதாகும். புலநிலையாகிய உடலை மறைத்தலே புறம் பற்றிய நாணாகும். இது எல்லார்க்கும் இன்றியமையாது. வேண்டப்படுவது என்பதை 'ஊண் உடை எச்சம் உயிர்க் கெல்லாம் வேறல்ல' என வள்ளுவரே காட்டுகின்றார், உடை எல்லோருக்கும் இன்றியமையாது வேண்டப்பெறு வதாகும். மனிதன் திருந்திய வாழ்வு பெறத் தொடங்கிய அந்த நாளிலேயே இவ்வுணர்வைப் வெற்றான். என்றாலும் அன்று அவனுக்குப் 'பட்டினும், மயிரினும் பருத்தி நூலி னும்' பலவகை ஆடை செய்து தருவார் இலர். எனவே தையற்கலை பொங்கல் மலரில் வந்தது (சனவரி'60)