பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடையும் தையற்கலையும் 31 அவன் மரப்பட்டைகளையும் விலங்கின் தோல்களை யுமே தன் புற உறுப்புக்களை மறைக்கும் ஆடைகளாகக் கொண் டான். அத்தகைய புறநாண் வழி உறுப்புக்களை மறைத்து வாழாத மனிதனை நிறை மனிதனாக அன்றைய மக்கட். சமூகமே மதிக்கவில்லை. அதனாலேயே 'ஆடையில்லா மனிதன் அரை மனிதன்' என்ற பழமொழி நாட்டில் எழுந் தது. எனவே மனிதன் அக நலமெல்லாம் ஒருங்கே பெற்ற போதிலும், புற அழகாகிய ஆடை புனையும் அமைவு இன் ரேல் அவன் நிறை மனிதனாக மாட்டான். எனவே மனி தன் மனிதனாக வாழத் தொடங்கிய அந்த நாளிலேயே ஆடையும் தோன்றிவிட்டது. விலங்குகளின் தோள்களையும் மரப்பட்டைகளையும் ஆடைகளாகப் பயன்படுத்திய மனிதன், மெல்ல மெல்ல.. அறிவு வளர வளர, பிறவகைகளிலும் தனது ஆடை வகைகளை ஆக்கிக் கொண்டான். பருத்தி ஆடையே அவற்றுளெல்லாம் சிறக்க இடம் பெற்றது. பட்டாலும் மயிராகிய கம்பளத்தாலும் கூட அவன் ஆடை நெய்யத் தெரிந்திருந்தான். இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பே தமிழர் இம்மூவகைப் பொருள்களிலும் ஆடை நெய்தனர் என்பதை, • நூலினும் மயிரினும் நுழை நூற் பட்டினும் பால்வகை தெரியாப் பன்னூறு அடுக்கத்து கறுமடி செறிங்க அறுவை விதியும் (சிலம்பு - 14, 204-07) என இளங்கோவடிகள் ஆடை விற்கும் கடைகளை மதுரைத் திருநகர்மேல் ஏற்றிக் கூறுகின்றார். மிகப் பழங்காலத்திலிருந்தே தமிழ்நாடு நல்ல நாகரி கத்தில் திளைத்திருந்தது. எனவே இதில் வாழ்ந்த மக்கள் பல்வேறு வகைகளில் ஆடை அணிகலன்கள் செய்து தம்மை அழகுபடுத்திக் கொண்டார்கள் என அறிகிறோம். இவ்வாறு ஆடை நெய்து தம் புற அழகினைப் புனைந்து?