பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொய்த மலர்கள்


-32

வாய்மையால் அக அழகையும் வழுவாது காத்து வந் தார்கள் தமிழ்மக்கள், செய்த ஆடையைப் பல்வேறு பெயர்களில் அழைத்தார்கள். வேட்டி, துண்டு, மடி, கலிங்கம், அறுவை போன்ற பல பெயர்களைக் காண் கிறோம். எல்லாப் பெயர்களையும் காரணம் காட்டியே கொண்டார்கள். இவ்வாறு பழங்காலத்தில் ஆடைகளைச் செய்து உடலில் அப்படியே சுற்றிக் கொண்டிருந்தார்கள் என்று எண்ணு வோமாயின் நாம் தவறி விட்டவராவோம். ஆடவ ரும் அழகாகப் பல் வேறு வகையில் தையல் இட்ட உடைகளை உடுத்தியிருந்தனர். தையல் என்ற சொல் பெண்களைக் குறிக்கும்; தையல் தொழிலையும் குறிக்கும். ஒரு வேளை அக்காலத்தில் இத் தையல் தொழிலைப் பெரும்பாலும் பெண்கள் தாம் செய்து வந்தார்களோ என்றம். அதனாலேயே அத்தொழிலுக்கு அவர் பெயரே அமைந்து விட்டதோ என்றும் நினைக்க வேண்டியுள்ளது. இலக்கணம் கூறவந்த பவணந்தியார் நூல் ஆக்கும் பணி பெண்களுடையதே என்னுமாறு இரு பொருள் தர ஒரு வெண்பாவைத் தருகிறார். • பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா - எஞ்சாத கையே வாயாக கதிரே மதியாக மையிலா நூல் முடியு மாறு' என்ற பாயிரப்பாட்டே அது. எனவே நூல் நூற்றும், நெய்தும், தையல் வேலை செய்தும் பெண்கள் அக்காலத்தில் சிறந்தார்கள் எனக் கொள்ளலாம். சங்க காலத்திலே யே பெண்களும் ஆண் | களும் பலப்பல வகையான ஆடைகளைத் தைத்து அணிந் தார்கள் எனக் காண முடிகிறது. அவற்றுள் ஒன்றை மட்டும் இங்குக் கண்டு அமைவோம்.