பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கொய்த மலர்கள் முருகன் சங்க இலக்கியங்களில் பிள்ளையார் பேசப்படவில்லை யாயினும் முருகன் யாண்டும் நீக்கமற நிறைந்து காணப் படுகின்றான். திணை நிலத் தெய்வங்களுள் ஒருவனாக-- குறிஞ்சிக் கொற்றவனாக நின்று மிகப் பழங்காலத்திலேயே அவன் காட்சி வழங்குகின்றான். மஞ்சு சூழ் மலையின் இயற்கை எழில்- அழகு- அவன் காட்சியாக விளங்கு கின்றது. மலைதோறும் மகிழ்ந்துறையும் நம் வள்ளி மணாளன் அன்றே 'நம் செந்தில் மேய வள்ளி மணாளனாக" அலைவாய்க் கடற்கரையில் காட்சி தருகின்றான். எனவே, நிலத்தெய்வமாக நிற்பதோடு அன்பர் மன நிறை தெய்வ மாகவும் அவன் காட்சி தருகின்றான் - மணவாழ்வில் புகும் பெண்டிர் தாம் விரும்பும் கணவரைப் பெற அவனைப் போற்றி வணங்கியதைக் காண்கின்றோம். முருகன் அலைகடல் நடுவுள் பேருருக் கொண்டு நின்ற சூரனைக் கொன்றவன் என்பதையும், அவனைப் பெற்றவள் ஒப்பற்ற அன்னையாகிய சத்தி என்பதையும், உருத்திரங் கண்ணனார் தம் பெருபாணாற்றுப் படையால் அழகு படக் காட்டுகின்றார். அந்த அன்னையைச் சூழ்ந்து பூதகணங்கள் ஆடிப்பாடி அவள் புகழ் போற்றுவதையும், அதைப் போன்றே நமது காஞ்சியில் வாழ்ந்த மன்னன் இளங் திரையனைப் பாடின் பரிசு பெறலாம் எனவும் காட்டு: கின்றார் அவர். 'வெண்திரைப் பரப்பின் கருஞ்சூர் கொன்ற பைம்பூண் சேய் பயந்த மாமோட்டு துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு தண்டா ஈகைநின் பெரும்பெயர் ஏத்தி வந்தேன் பெரும்' (பெரும். 458-61) என்பது அவர் வாக்கு இம் முருகன் சூரனைக் கொன்ற வரலாற்றை பதிற்றுப்பத்து.