பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலச் சைவம் நாள் திருவாதிரை. இம்மார்கழித் திங்களில் வரும் ஆதிரை நிறைமதி கூடிய நன்னாள் சிவனாரின் திருநாளாகக் கொண்டாடப் பெறுகின்றது. 'அத்தன் ஆரூர் ஆதிரை காளால் அதுவண்ணம்' எனப் பாடுகின்றார் அப்பர். அந்த நாள் சிவனுடைய நாள் என்பதை, 'அரும்பெறல் ஆதிரையான் (கலி 160-20) என்று கலித்தொகை காட்டுகின்றது. இதே கலி சிவனைக் • கொன்றை அலங்கல் அம் தெரியலான்' எனவும், 'பிறங்கு நீர்ச் சடைக் கரந்தான்' எனவும், 'ஏற்று ஊர் தியான்' எனவும். 'புதுத் திங்கட் கண்ணியான்' எனவும் பாராட்டு கின்றது. இவ்வாறு சிவபிரானுக்கு இன்று நாம் அமைக் கின்ற அத்தனைச் சிறப்புக்களும் சங்க காலத்திலேயே அமைந்திருந்தன என்பதை வெளிப்படையாகக் கண்டு அறியலாம். இன்னும், அச்சிவனார் பற்றிய பல வரலாறு களும் சங்ககால இலக்கியங்களில் நன்கு பேசப்பெறு கின்றன. இராவணன் கயிலை யைப் பெயர்த்தமை இராவணனைப் பற்றிய வரலாறு நாடு அறிந்த ஒன்று. நாற்புறமும் சுற்றி வெற்றிமாலை சூடிவந்த இராவணன் இமயமலைப்பக்கம் வர, அது தடுத்து நிற்க, அதை அப்படியே பெயர்க்க நினைத்தான். மலை ஆட, உமை அஞ்சி நிற்க. இறைவன் தன் விரலால் அழுத்த இராவணன் அம்மலையின் கீழ் நெடுநாள் உழந்தான். பின் நாரதர் காட்ட அருள் நிலை பெற்றுச் சாமவேதம் பாடிப் பிழைத்தான். இக்கதை நாடறிந்த ஒன்று இதையும் மற்றொன்றையும் சேர்த்துக் கலித்தொகைப் பாட்டு ஒன்று அழகுற நமக்குக் காட்டு. கின்றது. ' இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் உமையமர்ந் துயர்மலை இருந்தன னாக