பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

150 கொய்த மலர்கள் களில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று அவன் * ஆலமர் செல்வனாக' அமர்ந்த சிறப்பாகும். ஆல முற்றம் கல்லாலின் புடை அமர்ந்து வல்லார்க்கு அறமுரைத்த பெருந்திறல் பிற்காலச் சமய இலக்கியங்களிலெல்லாம் <நன்கு பேசப்படுகின்றது. சங்க இலக்கியங்களும் சிவனுக்கு உரிய பல்வேறு சிறப்புக்களோடு இவ் வால முற்றத்தையும் குறிப்பிடுகின்றன. ஆலமுற்றம் சிவனுக்கே உரிய தென்பதை, ஞாலம் நாறும் நலங்கெழு நல்லிசை நான்மறை முது நூல் முக்கட் செல்வன் ஆலமுற்றம் கவின் பெறத் தை இய பொய்கை சூழ்ந்த பொலன்மனை மகளிர் (அகம் 181) என அகநானூறு அழகுற நன்கு எடுத்து விளக்கிக் காட்டு கின்றது. இதையே , ஆலமர் கடவுள் அன்னநின் செல்வம் வேல்கெழு குரிசில் கண்டேன் ஆதலின்" (புற. 198) - என்று வடம வண்ணக்கன் பேரிசாத்தனாரும், நீலநாகம் நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த ......... ஆயும் (சிறுபாண். 96-99) என்று நல்லூர் நத்தனாரும் பாடியிருப்பதைக் காணலாம், சூலம்-கொடி முதலியன இவ்வாறு ஆலமர் செல்வனாய்- அறமுரைத்த அண்ண லாய்- அம்மையப்பராய் விளங்கிய சிவன் சூலம் பிடித்த சுடர்ப்படை உடையவனாகவும் உள்ளான் என்பதை, சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக் கடவுள்' என்று பதிற்றுப்பத்து அடி காட்டுகின்றது, இச் சிவ பெருமான் உமையோர் பாகத்தன் ஆகி உள்ளமையின் ஒரு