பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலச் சைவம் 49 உடன் றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின் சீரருங் கணிச்சியோன் சினவலின் அவ்வெயில் வரைபிளந்த (கலி-2) என்ற பாலைக் கலியில் அவனது மூவெயில் வென்ற முக்கண் சிறப்பும் பிறவும் பேசப்படுகின்றன. சடை முதலியன சிவனது தாழ்ந்த பிறை அணிந்த சடை, முக்கண்.. கறைமிடறு இவற்றைச் சங்க நூற்பாக்களின் அடிகள் நன்கு , எடுத்துக் காட்டுகின்றன. மிக்கொளிர் தாழ்சடை மேவரும் பிறை நுதல் முக்கணான் உருவே போல் (கலி-204) என்ற கலித்தொகையும். "ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை மாற்றருங் கணிச்சி மணியிடற் றோனும்' (புறம்-55) என்ற புறப்பாட லும், பணியி யரத்தை நின்குடையே; முனிவர் முக்கட்செல்வர் நகர்வலம் செயற்கே" (புறம்-6) என்ற காரிகிழார் பாடலும், "பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும் நீயே (புறம்-32) என்ற ஒளவையின் பாடலும், “மிக்கொலி தாழ்சடை மேவரு பிறைநுதல் முக்க ணான் (கலி-114) “பெரும்பெயர்க் கணிச்சியோன் மணிமிடறு" (கலி-205) என்ற கலித்தொகை அடிகளும், சிவனுடைய உடலி லமைந்த பல்வேறு தோற்றப்பொலிவுகளை நன்கு விளக்கிக் காட்டுகின்றன அன்றோ! இவையே அன்றிச் சிவனைப் பற்றிய வேறு சில குறிட்புக்களும் சங்க கால இலக்கியங்