பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சங்க காலச் சைவம் 55 அஞ்சுகிறாள். தெய்வத்தின் மேல் சூள் கூறிச் சென்ற தலைவன் குறித்த நாளில் வரவில்லை என்றால் அத் தெய்வம் ஏது செய்யுமே என்ற அச்சம் உண்டாயிற்று. ஆகவே, அத் தெய்வத்தை அவளே வேண்டுகிறாள். தலைவன் பிரிவை எண்ணித் தளர்ந்து வாடிய அவள் அத் தெய்வ அச்சத்தை எண்ணினாள். உடனே, தளர்வு காணின் தெய்வம் தலைவனைத் தண்டிக்கும் என்று உணர்கிறாள். தன் தளர்வு நீங்கியது போலவும், தலைவன் தவறவில்லை என்பது போலவும் காட்டிக் கொள்ளுகின்றாள். அதனால், தெய்வம் தலைவனைத் தண்டிக்காது எனவும் எண்ணு கிறாள். இக் கருத்தைக் கபிலர், மன்ற மராத்த பேஎம்முதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம் என்ப; யாவதும் கொடியர் அல்லர் எம் குன்றுகெழு நாடர் பசைஇப் பசந்தன்று நுதலே ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே (குறுந். 87) என்று தலைவியின் வழிபாட்டைத் தோழி தலைவற்குக் காட்டி, அவனிடம் தலைவி கொண்ட அன்பினை நன்கு தெளியப்படுத்துகின்ற முறையில் விளக்குகின்றார் அவர். இனி, இவ்வாறு கணவனைக் கண்டெடுத்த தலைவி யின் மாறுபாடு கண்ட தாயர் அவளை மலைவாழ் தெய்வம் தீண்டிற்று எனக் கருதி வெறியாட நினைக்கின்றனர். அச் செயலை வெறுக்கும் தோழி தலைமகற்கு உணர்த்தும் வகையில் தலைமகனையும் உடன்படுத்திக் குறுந்தொகை 263 ஆம் பாடலைப் பாடுகிறார் பெருஞ்சாத்தனார். அவர் வாக்கைக் கீழே தருகிறேன்: " மறிக்குரல் அறுத்து தினைப்பிரப்பு இரீஇ செல் ஆற்றுக் கவலைப் பல் இயங் கறங்க தோற்றம் அல்லது நோய்க்கு மருந்தாகா வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்தி -- போய்க் கொளீ இயள் இவள் ' எனப் படுதல் -நோதக் கன்றே (குறுந். 263)