பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

58 கொய்த மலர்கள் • பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீலமேனி நெடியோன் கோயிலும்' என (சிலம்பு. 3, 169-172) அவர் காட்டுகின்றார், மற்றும் பின் செங்குட்டுவனைக் கூறும் போது, அவன் சிவன் அருளால் பிறந்தவன் என்றும், வடக்கு நோக்கிச் செல்லும்போது சிவனை முன் வழி பட்டுப் பின் திருமாலை வணங்கிச் சென்றான் என்றும் காட்டு கின்றார். எனவே, சங்கம் மருவிய சிலப்பதிகார காலத்திலும் அரசரும் பிறரும் தமிழ் நாட்டில் சிவனையே முதல் தெய்வ மாகப் போற்றி வழிபட்டார்கள் என அறிகிறோம். மணிமேகலை ஆசிரியர் புகார் நகரிலுள்ள பல்வேறு தெய்வங்களைக் காட்டுகின்றார். வள்ளுவன் விழா அறை காதையின் அந்நகர மக்கள் செய்யும் விழா சிறப்புக்களைக் காட்டும்போதும், அவரவர் தெய்வங்களைக் காட்டும். போதும், ' நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலா பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறா' (மணிமே. 1, 54-55) எனக் காட்டிச் சிவனுக்கே ஏற்றம் தந்து போற்றுகின்றார். எனவே, தமிழ்நாட்டில் சங்க காலத்திலும், அதை ஒட்டிய காப்பிய காலத்திலும், சைவமே சிறந்த சமயமாகி நின்றது. என்பதும், பல தெய்வங்கள் நாட்டில் இருந்தாலும் சிவனே முழுமுதல் தெய்வமாகப் போற்றப்பட்டான் என்பதும் வெளிப்படை. பழக்க வழக்கங்கள் சங்க காலத்தில் இறைவனைப் போற்றுவதற்கு மாபு நெறி-பழக்க வழக்க முறைகள் - இருந்தன எனக் காண்