பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

59 சங்க காலச் சைவம் கின்றோம். அவை எத்தகையன என்பது விளக்கமாகக் காணப் பெறாவிடினும், மேலே கண்ட குறுந்தொகைப் பாடல்களாலும், திருமுருகாற்றுப்படை போன்ற பிற வற்றாலும் ஓரளவு நன்கு தெரிகின்றது. அவையெல்லாம் ஈண்டு விரிப்பில் பெருகும், எனினும், இறைவழிபாடு மரபுவழி கெடாது நடைபெற்று வந்தது என்ற உண்மையை. * தொன்றொழுகு மரபில் தம் இயல்பு வழா அது அருந்திறல் கடவுள் பழிச்சிய பின்றை ' (மலைபடு. 537-38) என்ற பெருங்கௌசிகனாரது அடிகள் நமக்கு அறிவுறுத்து கின்றன. மற்றும், அக்காலத்தில் வழிபடுமுறையில் கல் நட்டு, பீலி சூட்டி, துடி எழுட் பி, கள்ளும் பலியும் கொடுக்கும் சாதாரண வழக்கம் உண்டு என்பதை, * வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார் நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்து தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலிகொடுக்கும் (அகம், 35) அவிர்சடை முனிவர் அங்கி வேட்கும் ஆவுதி நறும்புகை ' (பட்டின. 53-56) என்ற அடிகள் நமக்கு நன்கு எடுத்து உணாத்துகின்றன அன்றோ . இப் மை வாழ்வு மட்டுமன்றித் துறக்க வாழ்வும் உண்டு என்பதை அன்றைய தமிழ் மக்கள் நன்கு அறிந் திருந்தனர். துறக்க வாழ்வு அல்லது தேவ உலக வாழ்வு சிறந்த ஒன்று அல்ல என்பதைச் சாத்தனார் மணிமேகலை யில் நன்கு காட்டுகிறார். என்றாலும், உலகில் அறமாற்றிச் சிறப்பார் அத் துறக்க வாழ்வு பெறுவார் என்பதும். அது இன்ப உலகம் என்பதும். அது பெறுதற்கரிது என்பதும் அவர்கள் கொண்ட கொள்கை என்பதை.