பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

166) கொய்த மலர்கள் காட்டி அழியாப் புகழ் பெறுகின்றனர். இவர்களைக் கண்டு அவ்வாறு பெற இயலாதவர்கள் -முடியாதவர்கள்வாய்ப்பிருந்தும் வழியறிந்தும் மனம் இல்லாதவர்கள் பொறாமைப்படுகிறார்கள். அதனால் பல கொடுமைகள் விளைகின்றன. உண்மை உழைப்பாளி-உடலாலாயினும் சரி, அறிவாலாயினும் சரி - ஒரு சிலருடைய பொறாமைக் கண் களுக்கு இலக்காகிறான். அதனால், அவர்கள் அவன் புகழுக்கு இழுக்குத் தேட நினைக்கிறார்கள். என வேதான் பூங்குன்றனார் இவ்வாறு புகழவே வேண்டாம் என விலக்கிவிட்டார். மணிவாசகனார் தம் வாழ் நாளி லேயே இத்தகைய துன்பத்தை அனுபவித்து விட்டவராதல் வேண்டும். எனவேதான் அவர் 'பேர் வேண்டேன்' என வெளிப்படையாகவே கூறிவிட்டார். • உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் " வேண்டேன் கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்' என்று அவர் தம் திருப்புலம்பலில் காட்டுகிறார். ஆம்! புலம்பல் தான். உலக நிகழ்ச்சியைத் தம்மேல் ஏற்றிப் புலம்புகிறார். உற்றார் ஊரார் என்பவர் செய்யும் கொடு மைகளையும், பேரால்-புகழால்--விளையும் தீமைகளையும் அவர் உள்ளம் எண்ணியிருக்கும். அவற்றுக்கெல்லாம் காரணம் கற்றவரே' என்பதும் அவர் உணர்ந்த ஒன்றாக இருக்கும். இன்றும் கற்றவரால் தானே நாடும் உலகமும் நலியுறுகின்றன எனக் காண்கின்றோம். இவற்றை எல் லாம் எண்ணித்தான் மணிமொழியார் இவ்வாறு கூறியுள்ளார். அவர் வாழ்வில் இவ்வாறு கூற நேர்ந்த காரணம் என்ன என்று காண்போம். மணிவாசகர் 'வாதவூர' ராக இருந்த நாள் அது. அப்போது பாண்டியன் அரிமருத் தனன் ஆட்சி செய்து வர்தான், அவர் அமைச்சர் குலத்தில் பிறந்தவராதலின்